Monday 25 September 2023

யார் இவன்? ராஜ பரம்பரையின் இளவரசனா?


 யார் இவன்?

ராஜ பரம்பரையின் இளவரசனா?
மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரின் மூத்த மகனா?
ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வெள்ளி கொலுசு வெண்கல குடம் தங்க கம்மல் தருவேன் .. வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கும் அளவு கோடிகளை சேர்த்து வைத்த அரசியல்வாதியா?
பஞ்ச் டயலாக் பேசும் சினிமா நடிகரா?
ஏன் இந்த எழுச்சி?
மக்கள் முகத்தில் எப்படி இவ்வளவு சிரிப்பு.. சிலிர்ப்பு?
ஒரு ஆடு மேய்ப்பவன் மகனுக்கு எப்படி இவ்வளவு ஆரவாரமான வரவேற்பு?
ஒரு விவசாயி மகன் நடந்தால் எப்படி உண்டாகிறது திருவிழா?
ஒரு வயல்காட்டு நடவு தாயின் மகனால் தன் வாழ்க்கை மாறும் என்று எப்படி நம்புகிறது தமிழகம்?
அண்ணாமலையானை கிரிவலம் சுற்றினால் நல்லது நடக்கும் என்று நம்பிய மக்கள் ..
ஒரு குடிசை வீட்டில் கஞ்சி குடித்து வளர்ந்த குழந்தை ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று .. 35 வயதில் கர்நாடக சிங்கம் என்ற புகழை பெற்று .. 38 வயதில் அந்த பதவியை அங்கேயே தூக்கி போட்டு .. தங்களுக்காக வந்தபோது .. கண்கள் தழும்புகிறது தமிழகம்..
அந்த அண்ணாமலை ஈசனே...தங்கள் வாழ்வில் நல்லது நடக்க. அனுப்பி வைத்த அற்புதனாக. நடந்து வரும் அந்த அண்ணாமலையை பார்க்கிறது .. தங்கள் கவலைகளை உடைத்து அழுதபடி தமிழகம் ..
இனி விடுவதற்கில்லை ..
எங்கள் தமிழர்களின் வயிற்றில் அடித்த எவனையும் ...
இனி விடுவதற்கில்லை ..
எங்கள் மண்ணில் பசித்திருக்க ஒரு தனி மனிதனையும் ...

No comments:

Post a Comment