Friday 18 August 2023

வேண்டும் வேண்டாம் . .

 வேண்டும் வேண்டாம் . .

*நம் வாழ்க்கைப் பயணத்தில் அனைவரது நோக்கமும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.*
*ஆனால் சிலர் மகிழ்ச்சியை வெளியே தேடுவதினால் அதைக் கடைசி வரை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.*
*மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .*
*அது வெளியில்
தேடிக் கிடைப்பதில்லை.*
*இது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
அது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
என்று ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு இருக்காமல்,
வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.*
* அனைத்திலும் மகிழ்ச்சியை உணர முயற்சி செய்யுங்கள்.*
*மகிழ்ச்சியான இதயங்களில் தான் இறைவன் குடி கொண்டுள்ளார். *
*உங்களுக்குள் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியை மட்டும் தான் உள்ளே அனுமதிப்பீர்கள்.*
*துன்பங்களைத் தேடித்தேடி கவலைப்படாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.*
*நாம் எப்போதும்
வாழ்க்கையில் என்ன
வேண்டும் என்று தான் சிந்தித்துக் கொண்டிருப்போம்*
*என்ன வேண்டாம் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை.*
*சுமை சேரச் சேர வாழ்வில் அழுத்தம்
அதிகரிக்கும்.
பொதுவாக நாம் அழுது
முடித்தவுடன் நம் மனம் இலகுவாக
இருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.*
*அதுபோல தேவையில்லாத
மனச் சுமைகள்,
பொருட் சுமைகளை அகற்றுங்கள்.
பின்
மனம் மகிழ்வதைக் காண்பீர்கள்.*

No comments:

Post a Comment