Monday 7 August 2023

மனசாட்சிப்படி வாழ்தல்

 மனசாட்சிப்படி வாழ்தல் . .

கவலை என்பது
சிறிய நூல் போன்றது.
கட்டிப் போட்டு விடும் நம் செயல்களை.
அது கவனத்தைச் சிதறச் செய்து வாழ்க்கையை வருத்தி விடும்.
தன்னம்பிக்கை என்னும் ஒளி உள்ளெழுந்தால் கடந்திடலாம் எல்லாவற்றையும்.
பயனற்ற சிந்தையால், பலமற்றுப் போகாதீர்கள்.
மரங்கள்
காற்றைச் சுத்தம் செய்கின்றன நம்பிக்கை
மனதைச் சுத்தம் செய்கிறது.
ஓட்டைப்படகு ஒடிந்த துடுப்பும் வைத்துக் கொண்டும் கரை சேரலாம் கடல் போல் நம்பிக்கை இருந்தால்.
நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்றுங்கள், அதில் புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்றுங்கள்.
போராட்டமே, வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி நம்பிக்கை சிறு நூல் தான்.
ஆனால் அந்த நூலில் கட்டி காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்க விடலாம்.
நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
வெற்றி நிச்சயம்.
*நீ சம்பாதித்தப் பணத்தை சேர்த்து வைக்கலாம்*
*ஆனால்*
*வாழ்க்கையைச் சேர்த்து வைக்க முடியாது.*
*பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்*
*மனிதர்களைச் சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்.*
*முற்றுப்புள்ளியைக் கூட
மூன்று முறை
வைத்தால் தொடர்ச்சியாகி விடும்.*
*எதிலும் குறைகளைக்
காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது.*
*எதையும் ரசிப்பவருக்கு
குறைகளே தெரியாது.*
*மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை.
மனசாட்சிப்படி
வாழ்ந்தாலே போதும்.வெற்றி நிச்சயம்.*

No comments:

Post a Comment