Thursday 10 August 2023

நமக்கு நாமே . .

 நமக்கு நாமே . .

நம்முடைய மனம்
பல விஷயங்களில் சிக்கி இருக்கிறது
அது தான் உண்மை என்று கருதி
அந்தச் சிக்கலிலே சுருங்கி கடினமாகி இருக்கிறது
நிபந்தனை அற்ற வாழ்வே இந்த சிக்களில் இருந்து
விடுபடுவதற்கு ஒரே வழி.
நிபந்தனை என்றால் இரு வகையுண்டு
ஒன்று,
பிறரை நிபந்தனைக்கு உட்படுத்துவது
மற்றொன்று,
தன்னைத்தானே நிபந்தனைக்கு உட்படுத்திக் கொள்வது.
நமக்கு நாமே எப்படி நிபந்தனை போட்டுக் கொள்கிறோம் என்றால்
இது, இப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும்
எனக்கு இன்னது கிடைக்குமானால்
நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும்
நமக்கு நாமே சில பல நிபந்தனைகளை வைத்துக் கொள்கிறோம்.
இது தவறு
எதை எல்லாம் நாம் நிபந்தனையாக வைத்துக் கொண்டோமோ
அது நடந்த பிறகும் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா.
எது கிடைத்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்தோமோ
அது கிட்டிய பிறகு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா.
சிறிது நேரம் மட்டுமே தற்காலிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
அதன்பின் நமது நிபந்தனை அடுத்தடுத்து வேறொன்றைச் சார்ந்து நிற்கிறது.
தொடர்ந்து நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிறைய நிபந்தனைகள் இருப்பதால்
மகிழ்ச்சி என்பது நிலைத்ததாகவும், நீடித்ததாகவும் இல்லை.
ஆனால், நமக்கு வேண்டியதோ நிலைத்த நீடித்த மகிழ்ச்சி
அது நிபந்தனை அற்ற
வாழ்வில் தான் கிட்டும்.
நிபந்தனைகளைக்
கடந்து
நிதர்சனாமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment