Saturday 26 August 2023

சிறப்பான வாழ்க்கை . .

 சிறப்பான வாழ்க்கை . .

அறம் என்பது எல்லாருக்கும் சிறப்பினைத் தரும். அறத்தைச் செய்பவனும் சிறப்புப் பெறுகிறான். அறத்தைப் பெறுபவனும் சிறப்புப் பெறுகிறான். அறமும் சிறப்புப் பெறுகிறது. அறத்தால் விளைந்த பொருள்களும் சிறப்புப் பெறுகின்றன. அறம் நிலைத்த வாழ்க்கையைப் பெறுகிறது. அதுவே சிறப்பு.
அறம் என்பது செல்வத்தையும் தரும். ஒருவன் தனக்கு வரும் பொருளை எல்லாம் அறத்திற்கே கொடுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனின் செல்வம் கரையுமா என்றால் கரைந்து போகாது என்கிறார் வள்ளுவர். அறம் செய்யச் செய்ய அறமும் வளரும். அறத்தைச் செய்வதற்கான பொருள் வருவாயும் அதிகரிக்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
நிலையில்லாத இந்த உலகத்தில் நிலையான புகழைத் தருவது அறம். ஓரிடத்தில் நிற்காத செல்லவத்தை
நிற்க வைப்பது அறம்.
பெருக வைப்பது அறம்.
எனவே அறங்களைச் செய்வது போன்ற ஆக்கமான செயல் வேறெதுவும் உலகத்தில் இல்லை. அறத்தைச் செய்யத் தொடங்குவது கடினம். அதனை ஒவ்வொரு நாளும் செய்வது என்பது இன்னும் கடினம். அதனைத் தொடர்வது என்பது இன்னும் இன்னும் கடினம்.
அறவாழ்க்கை என்பது தூய்மையான வாழ்க்கை. சிறப்பான வாழ்க்கை. செல்வம் மிகுந்த வாழ்க்கை. ஆக்கம் மிகுந்த வாழ்க்கை. உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத
நல்ல வாழ்க்கை அறவாழ்க்கை.
அறம் என்பது வேறு.
தருமம் என்பது வேறு.
தருமம் என்பது பலன் கருதாமல்
தாழ்ந்த ஒருவருக்கு உயர்ந்த ஒருவன் செய்யும் கொடை.
ஆனால் அறம் என்பது தர்மத்தைவிட வேறானது. அறம் என்பது கடமை. நியாயம். சத்தியம். நேர்மை இவற்றைக் கொண்டு அவரவர் கடமையைச் செய்வது.
அறமே சிறந்தது. அதுவே சிறப்பான ஆக்கத்தைத் தருவது.
அதனை மறவாமல்
எந்நாளும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment