Thursday 24 August 2023

அறம் சார்ந்த வாழ்க்கை . . .

 அறம் சார்ந்த வாழ்க்கை . . .

ஒருவர் ஒரு பாறையைப் பிளக்கப் பார்க்கிறார். 500 அடிகள் சம்மட்டியால் அடிக்கிறார். அவரால் பாறையைப் பிளக்க முடியவில்லை. அவருடைய தலைமுறைக்குப்பின், அவருடைய மகன் 499 அடிகள் அடிகள் அடிக்கிறார். அவராலும் பாறையைப் பிளக்க முடியவில்லை. அவருடைய காலத்திற்கு பின்பு, அவருடைய மகன் ஒரே ஒரு அடி மட்டும் பாறையைப் பார்த்து அடிக்கிறார். உடனே, பாறை இரண்டாகப் பிளக்கிறது.
இப்போது, பேரன் பாறையைப் பிளப்பதைப் பார்த்த ஒரு வழிப்போக்கர், பின்வருமாறு கூறுகிறார்;
'இந்த மனிதனைப் பாரு
சுலபமாக பாறைய உடைச்சுட்டான். நாமளும் நம்ம கிட்ட இருக்கற பாறை உடைக்க, போராடிகிட்டு இருக்கோம். உடைக்க முடியல. இந்த மனுஷனுக்கு எல்லாம் சுலபமாக நடக்கிறது'.
அந்தப் பேரன் பாறையை ஒரே அடியில் பிளப்பதற்கு, அவனது முன்னோர்கள் அடித்த 999 அடிகளும் காரணம் என்பதை அந்த வழிப்போக்கர் அறியாதபடியால், பேரனுக்கு எளிமையாக விஷயம் நடக்கிறது என்று எண்ணுகிறார்.
இப்போது, மேலே குறிப்பிட்ட கதையில், பின்வருமாறு எடுத்துக் கொள்வோம்.
பாறை = வாழ்வின் சிக்கல்
அடி = நல்வினை
எனவே, ஒருவருக்கு ஒரு சிக்கல் எளிதாக தீர்வதற்கு, அவரது முன்னோர்கள் மற்றும் அவர் செய்த நல்வினைகள் தான் காரணம்.
ஒரு மாங்கொட்டையை விதைக்கிறோம். அது மாமரமான பின்பு, நூற்றுக்கணக்கான பழங்களைக் கொடுக்கிறது. தாத்தா ஏற்படுத்திய மாந்தோப்பின் பழங்களை, மகன், பேரன்கள் அறுவடை செய்கின்றனர். ஒரு மாங்கொட்டைதான் வினை. ஆனால், வினையின் விளைவானது பன்மடங்கு. எனவே, நல்வினை, தீவினைகளின் பலன்களும் அதைப் போலவே, பன்மடங்கு பெருகி வரும்.
எனவே, ஒருவன் மற்றும் அவனது முன்னோர்கள் செய்த நல்வினையின் காரணமாக, அவனுக்கு பல விசயங்கள் எளிதாக நடக்கலாம். பலர் மிகவும் கஷ்டப்பட்டுச் செய்யும் ஒரு காரியம், அவனுக்கு மிக எளிதாக நிறைவேறலாம்.
எனவே, அறம் அதாவது நல்வினைகளின் மூலமே, ஒருவன் இம்மை வாழ்விலும், மறுமை வாழ்விலும் சிறப்படைய முடியும் என்பதனை வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
*சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு*
*ஆக்கம் எவனோ உயிர்க்கு.*
பொருள்
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது.
இதை, நம் வாழ்வில் நாம் கண்டிருப்போம். ஒருவருக்கு திருமணத்திற்கு வரன் தேடும்போது, உடனே அமையும். சிலருக்கு சில நூற்றுக்கணக்கான ஜாதகங்கள் தாண்டி அமையும். ஒருவருக்கு வேலை தேடும்போது, உடனே கிடைக்கும். ஒரு சிலருக்கோ, வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
*ஒருவருடைய வினைப் பயன்களுக்கு ஏற்றபடி, அவர்களது வாழ்வில் அவர் சிலவற்றை எளிதாகப் பெறுவதற்கு காரணம், அவரது, முன்னோர்களின் நல்வினைகளேயன்றி, வேறொன்றுமில்லை.*அறம் சார்ந்த வாழ்க்கை . . .

*ஒருவருடைய வினைப் பயன்களுக்கு ஏற்றபடி, அவர்களது வாழ்வில் அவர் சிலவற்றை எளிதாகப் பெறுவதற்கு காரணம், அவரது, முன்னோர்களின் நல்வினைகளேயன்றி, வேறொன்றுமில்லை.*

No comments:

Post a Comment