Monday 28 August 2023

*வீடோ,நாடோ

 *வீடோ,நாடோ

அனைத்திலும் ஒற்றுமை
என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும்
சீரழிந்து விடும்.*
*இதனை,‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’ என்ற பழமொழி எடுத்து உரைக்கின்றது.*
*ஒன்று பட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம்.
இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.*
*கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.
நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.*
*அதனைக் கண்டு அவர் மிகவும் வருத்தமாக இருந்தார் .
ஒற்றுமையாக இருங்கள் என்று அவர் எவ்வளவு அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.*
*ஒரு நாள் அவருக்கு உடல் நலம்
சரி இல்லாமல் போகவே, அவர்களுக்குப் பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை நடத்தினார்.*
*அவர் நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை எடுத்து வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள்.*
*மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாகக் கட்டச் சொன்னார்.*
*பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் கட்டியக் கம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.*
*பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.*
*ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்கள் நாலு பேரும் நான்கு கம்புகளைப் போலத் தான்.*
ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
*எவ்வளவு சின்னப் பொருளானாலும், அவை ஒன்று சேரும் போது எந்தச் செயலையும் முடிப்பது எளிது..*
*அதைப் போலவே பல பேருடைய மனம் ஒன்றுபட்டால், செய்ய முடியாதது எதுவுமில்லை.*
*ஒன்றுபட்டு வாழ்வோம். *
*வாழ்வில் உயர்ந்து நிற்போம்.*

No comments:

Post a Comment