Thursday 17 August 2023

வேண்டுதல் வீண் போகாது . . .

 வேண்டுதல் வீண் போகாது . . .

*எள்ளுக்குள் எண்ணெயுண்டு,
ஈரக் காற்றுக்குள் நீருண்டு,
பசும் பாலுக்குள் நெய்யுண்டு.*
*கடல் நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு,
உடலுக்குள் உயிருண்டு.*
*இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால்
இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.*
*அதுபோலவே
இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார்.*
*அனுதினமும்
மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.*
*அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை.*
*அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள்
உங்கள் வேண்டுதல் வீண்போகாது.*
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
*"அரை படி அரிசியில் அன்னதானம்; விடிகிற வரையில் மேளதாளம்".*
ஒரு சிறு சாதனையையோ, நல்ல காரியத்தையோ செய்து விட்டால் போதும் கூரை மேல் நின்று பறை சாற்றுகிற பழக்கம் பலருக்கு உண்டு.
ஆனால் சத்தமில்லாமல் பலவற்றை சாதித்து அடக்கமாக இருக்கும் மகத்தான மனிதர்களும் உள்ளனர்.
ஒரு துறவியிடம் அரசன் நான் மக்களுக்கு இலவச விடுதிகள் கட்டியுள்ளேன், கோவில்களில் திருப்பணி செய்துள்ளேன், தினமும் அன்னதானம் செய்கிறேன் என்று நீட்டிக்கொண்டே போனான்.
துறவி அப்படியா என்று தலையாட்டிவிட்டு அமைதி காத்தார். அரசனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அவர் தன்னைப் பாராட்டுவார் என்றிருந்த அரசனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் விடாமல் துறவியே இவ்வளவு சேவை செய்த எனக்கு சொர்க்கம் நிச்சயம்தானே என்றான். இல்லை என்றார் துறவி.
அதிர்ச்சியுடன் ஏன் என்றான் அரசன். எதைச் செய்தாலும் நான் தான் செய்தேன் என்ற தற்பெருமை கூடாது. அது புண்ணியத்தை தடுத்து பாவச் சேற்றில் ஒருவனைத் தள்ளிவிடும். எனவே சொர்க்கம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.
இதைத்தான்
*வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது*
என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment