Tuesday 29 August 2023

அளவோடு இருக்கட்டும் . .

 அளவோடு இருக்கட்டும் . .

உங்களில் நிறைய பேர் ஒருக்காலத்தில் இப்படியிருந்திருப்பீர்கள்.
காசு, பணமெல்லாம் முக்கியம் இல்லைன்னு எல்லோருக்கும் தாராளமாகச் செலவு பண்ணியிருப்போம்.
நம்மை மதிக்காதவர்களுக்கெல்லாம் ஓவராக மரியாதை குடுத்து பேசியிருப்போம்.
சில தேவையே இல்லாத உறவுகளெல்லாம் முக்கியமென்று நினைத்திருப்போம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி முதுகுக்கு பின்னாடி பேசியதை நினைத்து வருத்தப்பட்டிருப்போம்.
மற்றவர்கள் நம்மை தப்பா நினைச்சிடுவாங்களோன்னு ஏதாவது செய்யணும்னா கூடப் பார்த்துப் பார்த்து செய்திருப்போம்.
இப்படி நிறைய விஷயங்கள் நம்ம ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இருக்கும்.
*இப்போ இருக்கும் ஒன்று அப்போதே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பது தான் "பக்குவம்".*
ஆனால் இந்த பக்குவத்துக்கு இருக்குற ஒரு சிறப்பம்சமே, அது அடிப்பட்டால், மிதிப்பட்டால் தான் கிடைக்குமே, அது ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்.
பக்குவப்படாத நேரங்களில் பெரிதாக எதுவுமே இழக்கவில்லையென்றாலும் நிம்மதி, சந்தோஷத்தையெல்லாம் இழந்திருப்போம்.
சந்தோஷமாக இருக்க மற்றவர்கள் தேவையில்லைங்குற புரிதல் காலப்போக்கில் தான் கிடைக்கும். நம்ம நமக்கு இருக்கும் பிரச்சனைகள் என்று நினைப்பது நமக்கு மற்றவர்கள் உருவாக்கி விட்டதாகவே இருக்கும்.
முக்கால்வாசி நேரம் சொந்த பந்தங்களின் கேள்விக்காகவோ இல்லை அவர்களுக்கு முன்பு பெருமைக்காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காகவோ தான் போராடியிருப்போம். ஆனால் இதனால் என்ன பயன் இருக்கு, அந்தப் பக்குவம் எந்த வயதில் உங்களுக்கு வந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை குறைத்து விட்டால் உங்கள் பிரச்சனைகளும் தானாகவே குறைந்து விடும். மற்றவர்களிடம் அளவோடு மட்டுமே வைத்து கொண்டால் நிம்மதியாகயிருக்கலாம் என்னும் ஞானம் பக்குவப்பட்ட பிறகே வரும்.
இனியாவது நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும் இடத்தை நோக்கியே பயணப்படுவோம்.
All reactions:
Iyyappan Thiyagarajan, Chandra Sekar and 7 others

No comments:

Post a Comment