Monday 14 August 2023

பாடல் பிறந்த கதை🌹 ஆயிரம் திரைப் பாடல்களை அச்சிட்டுப் பார்த்து, மேலும் இரண்டாயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டதையும் பார்த்து விட்டேன். எழுதியது ஐயாயிரம் என்றாலும், படித்தால் கவிதை போல் இருப்பது ஆயிரம் இருக்கும். "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் வரும் "முத்தான முத்தல்லவோ” பாடல் பத்து நிமிடத்தில் எழுதப்பட்டது. “படிக்காத மேதை” யில் வரும் “ஒரே ஒரு ஊரிலே” பாதி பாட்டு வங்கி போகும் அவசரத்தில் எழுதப்பட்டது. “ஆலயமணி”யில் வரும் “சட்டி சுட்டதடா” பல்லவி, எழும்பூர் கோர்ட்டில் உருவானது. வேடிக்கையாக புகழ் பெற்று விட்ட “எலந்தப் பழம்” நல்ல பசி நேரத்தில் எழுதப்பட்டது. “காலங்களில் அவள் வசந்தம்” கீதை படித்த போது தோன்றியது. பாண்டிச்சேரி தேர்தலுக்கு அறிஞர் அண்ணா அவர்களோடு போனபோது, ஒரு மிக்சர் பொட்டலத்தின் எதிரொலி, “அத்தான் என்னத்தான்”. மதுரைக்கு போகும் போது, அதிகாலையில் கண்விழித்து, ரயிலில் கதவோரமாக சாய்ந்து கொண்டிருந்த வேளையில் அருள்வாக்காக தோன்றியது “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடல். காமராஜரோடு அதிக ஈடுபாடு கொண்ட போது, அந்த உணர்ச்சியில் பிறந்தது “கர்ணன்” படத்தில் வரும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடல். இவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. சுமார் இருநூறு பாடல்கள் இப்படி காரணத்தோடு பிறந்திருக்கும். மற்றவையெல்லாம் படத்திற்கென்று எழுதியவையே. தன்னுடைய “சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்” என்ற நூலில் கவியரசர் கண்ணதாசன். நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்


 

No comments:

Post a Comment