Saturday 12 August 2023

புத்தகமும் வாழ்க்கையும் . .

 புத்தகமும் வாழ்க்கையும் . .

*வாழ்வின்
ஏதோ ஒரு புள்ளியில்
அத்தனை சுமைகளையும்
இறக்கி வைத்துத் தானே
தீர வேண்டும்.
அது வரை சுமப்போம்
சுகமான சுமைகளை.*
*நம் அன்றாட பழக்க வழக்கங்கள்
சிலவற்றை மாற்றிக்கொள்ளாமல்
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை
எதிர்பார்க்க முடியாது.*
*மனதால் பேசாமல் மனிதாபிமானத்துடன் பேசுங்கள்.
உங்கள் சொல் ஒருவருக்கு வாழ்க்கையாக மாறலாம்.*
*மனிதாபிமானமற்ற
ஒன்று
தெய்வீகமானதாக
இருக்க முடியாது.*
*பரிணாம வளர்ச்சிக்காகவே பூவுலக வாழ்க்கை உள்ளது. ஒவ்வொரு ஜீவிதமும், விவேகம், திறமை மற்றும் மனப்பாங்குகளை மேம்படுத்துகின்ற பரிணாம வளர்ச்சியே ஆகும்.*
*எனக்கு எல்லாம் தெரியும்
என்று குழப்பத்தோடு
இருப்பதற்கு பதிலாக எனக்கு
எதுவும் தெரியாது என்று
தெளிவோடு இருப்பது சிறந்தது*
*படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும்
ரசிக்கத் தெரியாதவர்
கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகித் தான் விடுகிறது.*

No comments:

Post a Comment