Wednesday 23 August 2023

கொடுப்பதும் கிடைப்பதும் .

 கொடுப்பதும் கிடைப்பதும் . .

*விடை தெரியாத வரை தான் வினாக்களுக்கு
ஒரு சுவாரசியம் இருக்கும்.*
*எதிர்காலம் அறியாத வரை தான் நிகழ்காலத்திற்கு உயிர் உண்டு.*
*மற்றவருக்கு
நம்பிக்கையாக இருங்கள்.*
*ஆனால், ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க.*
*நாம் தெரிந்த நியாயம்
இது என்று விவாதிக்கலாம் தவறில்லை.*
*ஆனால்,
நமக்குத் தெரிந்தது மட்டும் தான்
நியாயம் என்று விவாதிப்பது தான் தவறு.*
*கொடுத்தால்
மறந்து விடுங்கள்.
கிடைத்தால் நினையுங்கள்.*
*பிறருக்கு வருவதை நீங்கள் தடுக்க நினைத்தால் உங்களுக்கு வருவது தானாக நின்று விடும்.*
*நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள்
கெட்டது நடந்தால் அதை அனுபவமாக்குங்கள்.*
*நீச்சல்
தெரியாதவருக்குப்
பயமாகவும்
சறுக்கி
விளையாடுபவருக்கு மிக
அழகாகவும் தெரியும்
கடலலைகள் போல்தான்
வாழ்வும்.*
*உனது வாயையும்
பணத்தையும் கவனமாகத் திற,*
*அப்போது தான்
இரண்டிற்கும்
நல்ல மதிப்பிருக்கும்.*
*அனுபவங்கள்
கொட்டி கிடக்குமிடம் முதுமை.*
*அன்பிலிருந்து
வெறுப்பா மாறுவது சுலபம்.*
*ஆனால்.*
*திரும்ப வெறுப்பில் இருந்து
அன்புக்கு மாறுவது ரொம்பச் சிரமம்.*
*அத்தனைக்கும் ஆசைப்படு
துணிந்தே ஆசைப்படு*
*கிடைச்சா கிடைக்கட்டும்,
கிடைக்காவிட்டா போகட்டும். *
*பணம் பற்றிக்
கொண்டு எரியும் நெருப்பு*
*அதில் குளிர்
காய்ந்தவனும் உண்டு
எரிந்து வெந்து
போனவனும் உண்டு.*
*மானிடப் பிறவி மற்ற உயிரினங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு அதன்படி நீ வாழ்ந்து காட்டு.*
*பொழுதுபோக்கு
வந்த இடத்தில்
உன் பொழுதை இழந்து விடாதே.*

No comments:

Post a Comment