Wednesday 16 August 2023

சேலத்தில் நடைபெற்ற கண்ணதாசன் இலக்கிய விழா.

 சேலத்தில் நடைபெற்ற

கண்ணதாசன் இலக்கிய விழா.
நேற்று இரவு சேலம் மாநகரில் உள்ள சோனா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளியப்பா ஆடிட்டோரியம், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட மாநாட்டு அரங்கில் கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற 11 ஆண்டு விழாவிற்கு சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் சொ. வள்ளியப்பா தலைமை தாங்கினார்.
மன்றத்தின் அமைப்பாளர் ஏஎன். பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
முரண் திறன் என்ற தலைப்பில் மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் 50 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில் எம் ஜி ஆர் அவர்கள் கண்ணதாசன் பேராற்றல் மீது கொண்டதன் வெளிப்பாடு தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டது. 1961 வரை அதன் பின்னர் 1981 வரை அவரது வாழ்வில் நடந்த வெளிப்படையான சம்பவங்களை எடுத்துக் கூறினார்.
வாசிக்கிற எனது நூல்களில் உள்ள கருத்தினை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும், நூலாசிரியரின் வாழ்க்கைப் பின்பற்ற விடக் கூடாது என ஒப்புதல் வாக்குமூலம் தந்த வெளிப்படையான மனிதர்.
பனித் துளிக்குள் கடல் போல பன்முக ஆற்றல் பெற்றவர் கண்ணதாசன்,
திரைப் படப் பாடல்கள், கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இலக்கியம், கவிதை, ஏராளமான நூல்கள்,
அரசியல், ஆன்மீகம், அர்த்தமுள்ள இந்துமதம், ஏசு காவியம் என அவரது பங்களிப்புகள் நம்முடன் இன்றும் உள்ளன என்றார்.
இளைஞர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது உடலைக் காப்பாற்றிக் கொள்வது பற்றியே.
காற்றடிக்கும் போது துரும்பு மலையை விட அதிக உயரத்தில் பறக்கும். அதனால் துரும்பை விட மலை தாழ்ந்ததாகி விடாது.
இது போன்ற ஏராளமான எளிய கருத்தினை விதைத்து
நெறுப்பாற்றில் மெழுகுப் படகில் பயணப்பட்டவர் கண்ணதாசன் என்றார்.
முனைவர் கு. ஞானசம்பந்தன்
என்றென்றும் கண்ணதாசன் என்ற தலைப்பில் 56 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் லேனா. நாராயணன் தொகுத்து வழங்கி கண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார்.
மன்ற அமைப்பாளர் எஸ். செந்தில்நாதன் நன்றி கூறினார்.
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அமரும் பிரம்மாண்டமான அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் இருந்தது கூடுதல் சிறப்பு.
முன்னதாக மன்ற அமைப்பாளர்கள் ஐவரின் இல்லத்தரசிகள் குத்து விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை மன்ற அமைப்பாளர்கள் லேனா. சுப்பிரமணியன், சிடி. தியாகராஜன், பிஎல். சுப்பிரமணியன்,
மற்றும் எஸ். சாமிநாதன், பிஎல். அண்ணாமலை, டி. சிதம்பரம் என்ற கோகுல், எஸ். லெட்சுமணன், எஸ். சாய் சோனா உள்ளிட்ட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
விழாவில் நகரத்தார்களின் முன்னோடி வலையபட்டி அ. கலையரசன், ராங்கியம் பெரியகருப்பன் செட்டியார், மேலைச்சிவபுரி பிஎல். ராமசாமி, நாட்டரசன்கோட்டை எல் ஆர்எம். ராமகிருஷ்ணன், ஏற்காடு ஆர்எம். சிங்காரம், மூத்த பத்திரிகையாளர் கே. டி. கூடலரசன், மற்றும் நகரின் முக்கியப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஏராளமான நகரத்தார் பெருமக்கள் என பங்கேற்றனர்.


















































No comments:

Post a Comment