Friday 11 August 2023

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது.

 எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது.

நம் வாழ்வில் நாம் எதனையும் இழப்பதில்லை.
இழத்தல் என்ற பெயரில் பல விசயங்களை, அனுபவங்களைக் கற்கிறோம்.
இவ்வுலகில் தோல்விகள் என்பதே கிடையாது. அனைத்துமே நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகள்.
அனைத்தையும் பிரச்சினைகளாகப் பார்க்காமல், தீர்வாகப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
பலர் கூறுவார்கள்,
"தோல்விதான் வெற்றியின் முதல்படி" என்று. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்விதான் ஒருவனுக்கு கிடைக்கும்
உண்மையான வெற்றி.
எவனொருவன் தோல்வியைக் கண்டு அஞ்ச மறுக்கிறானோ, அவனே வெற்றி அடைந்தவர்களைக் காட்டிலும் பல விசயங்களைக் கற்கிறான.
பல தோல்விகளுக்குப் பின் வரும் வெற்றியே நம் மனதிற்கு முழுமையான திருப்தியை உண்மையான மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
அனைத்தையும் நேர்நிலையாகக்
காண கற்றுக் கொள்ளுங்கள்.
*மனிதன் வாழ்க்கையில் காலங்கள் மூன்று வகை.*
*சிரித்து பேசி
விளையாடுவது ஆரம்ப காலம்.*
*பேச நேரமில்லாமல்
ஓடிக்கொண்டு இருப்பது
இடைப்பட்ட காலம்.*
*பேச யாருமில்லாமல்
தவிப்பது கடைசி காலம்.*
*வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.*
*உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வாழ்க்கையானது பலருக்கு கனவாக இருக்கிறது.*

No comments:

Post a Comment