Tuesday 8 August 2023

கவனமாக இருப்பது . .

 கவனமாக இருப்பது . .

வாழ்க்கை முடியும் போது முக்தி கிடைக்கும்.
அது வாழும் போதே கிடைந்து விட்டால் எப்பவும் மகிழ்ச்சியே.
ஒரு பொருள் வரும் போது துள்ளல் வேண்டாம்.
நம்மை விட்டுப் போகும் போதும் துயரமும் வேண்டாம்
என்றால் இதுவே முக்தி நிலை.
ஒரு ரகசியம் உண்டு
நாம் மனத்தால் நினைப்பதை
பிரபஞ்சம் பொருளாக மாற்றித் தரும்.
பிரபஞ்சத்தில் இல்லை என்ற சொல் இல்லை.
ஆகையால் நாம் நினைப்பதில் இல்லை என்ற சொல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
"ததாஸ்த்து" என்ற சொல் மட்டுமே பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பு.
"ததாஸ்து" என்றால் "
அப்படியே ஆகட்டும்" என்று பொருள்.
எதை நினைக்கிறோமோ
அதை அப்படியே ஆகட்டும் என்று பிரபஞ்சம் பிரதிபலிப்பதால்..
நேர்நிலை எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.
உடல் நலம் வேண்டும்
என்று கேட்டால் நலம் கிடைக்கும.
மாறாக
நோய் இல்லாமல்
இருக்க வேண்டும் என்றால்.
இல்லை என்ற வார்த்தையைப் பிரபஞ்சம் எடுத்துக் கொள்ளாது.
நோய் என்ற சொல்லை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
அதையே நமக்கு பிரதிபலித்தும் கொடுக்கும்.
ஆக நாம் எண்ணத்தில் கவனமாக இருந்தால் நலமே நடக்கும்.
இதுவே "எண்ணம் போல் வாழ்வு" என்று பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment