Wednesday 16 August 2023

தெளிவு அறிவு ஞானம் . .

 தெளிவு அறிவு ஞானம் . . .

*யாரிடம் பேசவேண்டும்
என்பது "தெளிவு"*
*எதைப் பேசவேண்டும்
என்பது "அறிவு "*
*எப்போது பேசவேண்டும்
என்பது "ஞானம் "*
*வாழ்க்கையில் முறையான வழியில் முன்னேற வேண்டுமென்றால்...*
*முதலில் மட்டம் தட்டிக்
கொண்டிருப்பவர்
களையும்..*
*ஒவ்வொரு செயலிலும் குறையை மட்டுமே காண்பவர்களையும்*
*உனது தொடர்பில் இருந்து விலக்கி விடு.*.
*விலகிச் சென்றுவிடு...*
*உனக்கான முன்னேற்றப் பாதை வெளிச்சமாய்த் தெரியும்...*
*பெருமைக்காக வாழாதீர்கள்.
மன நிம்மதிக்காக
வாழ்ந்து பாருங்கள் உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.*
*சந்தோஷம் என்பது நீங்கள் வாழும் இடத்தில் இல்லை.
நீங்கள் வாழும் விதத்தில் தான் உள்ளது.*
*கனவுகள் நினைவாகுமா, சொல்லும், செயலும் ஒன்றாக இருந்தால் நிச்சயம் நினைவாகும்.
நல்ல எண்ணங்களோடு
கனவு காணுங்கள். வெற்றி நிச்சயம்.*
*யாரோ போல வாழ வேண்டும்.
யாரோ போல சம்பாதிக்க வேண்டும். யாரோ போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுவோம்.*
*ஏனென்றால் நாம் ஏற்கனவே ஒரு மிகச்சிறந்த படைப்பு.
யாருக்காகவும்,
யாரையும் பார்த்து நம்மை மேம்படுத்தத் தேவையில்லை.*

No comments:

Post a Comment