Monday 28 August 2023

இன்பம் துன்பம் . .

 இன்பம் துன்பம் . .

மனிதனின் வாழ்வில்
நல்லவைகளைச் சீர்தூக்கிப் பாத்து கெட்டவைகளைப் புறத்தில் தள்ளி வாழமுடியாமல் போனதன் காரணம் என்ன.
நல்ல விஷயங்கள்
கெட்ட விஷயங்கள்
என்று ஒன்றும் கிடையாது.
நாம் எடுத்துக்கொள்ளும் விதம் தான் அப்படி நல்லதாகப் பார்த்தால் நல்லது கெட்டதாகப் பார்த்தால் கெட்டது என்று பல சிந்தனையாளர்கள் கூறுகின்ற இந்த கூற்று உண்மைதானா.
மனதிலும் உடலிலும் வலி ஏற்படுத்தும் விஷயங்கள் கெட்டவை என்றும் அதே மனம் உடல் சந்தோஷப்பட்டால் அது நல்லது என்றும் எடுத்துக்கொள்ளலாமா.
இன்பம் என்பதும், துன்பம் என்பதும் நமது வாழ்க்கை முறைகளை மட்டுமே வைத்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியாமல் வேறு ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அதன் படியேதான் நம் வாழ்க்கை செல்வது போலத் தெரிகிறது அப்படித்தானே.
மனிதனின் பிறப்பில் முதல் வினாடியே இவனது இன்ப துன்பங்கள் வரையறுக்கப்பட்டு பிறக்கிறான்.
அப்படியானால் கண் மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் நல்லது கெட்டது என்று பாகுபாடு பாராமல் மனிதன் காரியங்கள் செய்யலாமா. செய்யமுடிகிறதா இல்லையே.
தவறைச் செய்யும் ஒவ்வொரு மனிதனும் இது தவறு என்று தெரிந்து செய்வதும்
நல்லது செய்யும் போது இது நல்லது என்று தெரிந்து செய்வதும் இயற்கையான உண்மை.
தவறோ சரியோ அதைப் பலமுறை செய்யும்போது அது பழகிப் போய்விடுவதும் இயற்கையே.
படைத்தவன் இருக்கான்
பார்த்துக் கொள்வான்
பயணத்தைத் தொடர்ந்து விடு
என்ற கவிஞனின் வார்த்தையைப் போல முக மலர்ச்சியோடும்,
நம்பிக்கையுடனும் எழுந்து
புதிய நாளைத் துவங்குவோம்.

No comments:

Post a Comment