Monday 7 August 2023

மதுரை தென்னக வாணியர் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா முப்பெரும் விழா.

 மதுரை தென்னக வாணியர் சங்கம்

30 ஆம் ஆண்டு விழா
முப்பெரும் விழா.
மதுரை தென்னக வாணியர் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா இன்று காலை அதன் தலைவர் அஞ்சலி கே எஸ் ஆர். நடராஜன் தலைமையில் புட்டுதோப்பு கோவில் வளாகத்தில் உள்ள அன்னை சங்கரம்மாள் வாணியர் அரங்கில் நடைபெற்றது.
செயலாளர் பி. முருகன் சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துச் சொல்லி வரவேற்றார். பொருளாளர் எஸ். செல்வபாண்டியன் வரவு செலவு கணக்கு சமர்பித்தார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
ஊருக்கு உழைத்திடல் யோகம்
என்ற தலைப்பில் எழுபத்தைந்து நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில்
தங்கம் சாதிக்காததைச் சங்கம் சாதிக்கும், கல்விக்கு முன்னுரிமை தரவேண்டும். இது அவசரம் அவசியம்.
இளைஞர்கள் முடிந்தவரை தொழில் மற்றும் வணிகம் செய்திட வேண்டும். வேலைவாய்ப்பு, திருமணம் இதற்கு சங்கம் துணைபுரிய வேண்டும்.
தங்கள் சமூக அமைப்பு தரும் பாராட்டும் பரிசுத் தொகையும்
மிகப்பெரிய விருதுகளை விடச் சிறந்தது.
வளரும் தலைமுறை உடல்நலன், உணவுப் பழக்கம், தொடர் உழைப்பு, பெற்றோரைப் பேணுதல், உறவுகளை மதித்தல் எனச் சிறந்திட வேண்டும் என்றார்.
கல்வி ஊக்கத் தொகை ரூ ஐந்து ஆயிரம் வீதம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்டது.
அனைவருக்கும் மதியம் சிறப்பு உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னதாக உறுப்பினர் கையேடு வெளியிடப்பட்டது.
அரங்கில் உள்ளேயும் வெளியேயும் நிரம்பப் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் என் எஸ். பழனிச்சாமி, பிடிஎம். சேகர், டி. முருகதாஸ், சக்ரா வி. ரமேஷ், ஆர். கார்த்திகேயன், ராமையா, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















No comments:

Post a Comment