Monday 14 August 2023

ஒரு நொடி போதும்.

 ஒரு நொடி போதும்.

*எதையும் தேடி
நாம்
செல்லத்
தேவையில்லை*
*நிறைவான மனது
நம்மிடம்
இருந்தால்.*
*முதுமையும்
ஒரு குழந்தை தான்
தாலாட்ட வேண்டாம்.*
*தள்ளாடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.*
*துன்பம் கூட
ஒரு வாய்ப்புதான்.
அதைக் கையாளுவது
தான் திறமை.*
*சந்திக்கத் துணிந்திடு
அதுவே சாதிக்க வழியாகும்.*
*சிந்திக்க முற்படு அதுவே சோதனையின் வெற்றியாகும்.*
*இனிமேல், இதில் எதுவுமே இல்லை எனத் தூக்கி எறியப்படும், மாங்கொட்டை தான்.*
*அடுத்த, தலைமுறைக்குத் தேவையான, பழங்களைத்
தன்னுள்ளே வைத்திருக்கிறது, எனும் உண்மையை உணர வேண்டும்.*
*நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் வாழ்க்கையும், அப்படித்தான் என்பது யதார்த்ததம்.*
*வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடன் இருங்கள்.*
*படைத்தவன் மனது வைத்தால் அனைத்தையும் மாற்றுவதற்கு
ஒரு நொடி போதும்.*
*உங்கள் வாழ்வில் உங்கள் கடினமான சூழ்நிலைகள் எதுவும் நிரந்தரம் அல்ல.*
*அனைத்தும் நிச்சயம் மாறும்.*
*ஒவ்வொரு நொடியிலும் நம்பிக்கையுடன் நகர்ந்து செல்லுங்கள். *
*உங்கள் நம்பிக்கை உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றும். *
*இறை அருளால் உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய மாற்றங்கள்
ஏற்பட்டு மிகச் சிறப்பாக வாழ்வதற்கு
வாழ்த்துகள்
.*

No comments:

Post a Comment