Wednesday 9 August 2023

வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் .

 வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் . .

(தென்கச்சி சுவாமிநாதன்
பேசியது.)
எந்த சூழலில் இருந்தாலும் சரி.
இந்த "உறவுகளை வளர்க்கும் திறன்" (Inter Personal Skills) உள்ளவங்க சீக்கிரம் முன்னுக்கு வந்துடறாங்க.
மற்றவர்களிடம் உறவை பலப்படுத்திக்கிறது எப்படின்னு
தெரிஞ்சுக்கிட்டோம்ன்னா எந்தவொரு தடையையும் சுலபமா தாண்டி,
வாழ்க்கையில் முன்னுக்கு வந்துடலாம்.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துலே ஒரு கணக்கெடுப்பு பண்ணிப் பார்த்தாங்களாம். பார்க்கிற வேலையிலே எதுமாதிரி குணாதிசயம் உள்ளவங்க வேகமா முன்னுக்கு வாறாங்க'ன்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்தக் கணக்கெடுப்பு.
வெவ்வேறு துறையிலே வேகமா முன்னுக்கு வந்திருக்கிற பலபேரை சந்திச்சு இந்த 'சர்வே'யை நடத்தியிருக்காங்க. அவங்க கண்டுபிடிச்சு சொல்லியிருக்கிற உண்மை என்ன தெரியுமா.
ஒருத்தர் ஒரு வேலையிலே இருந்தா. அது சம்பந்தப்பட்ட 'சப்ஜெக்ட்' பற்றிய அறிவு 35 சதவீதம் இருந்தா போதும், ஆனா `உறவுகளை வளர்க்கும் திறன்'- Inter Personal skills - 65 சதவீதம்
வேணும். இப்படி உள்ளவங்க
சீக்கிரம் முன்னுக்கு வந்துடறாங்க.
அதனாலே ஒருத்தருக்கு வேலை சரியா புரியலேன்னா கூட விவரமா
மத்தவங்ககிட்டே பழகறது எப்படிங்கறது புரிஞ்சா போதும், அவரு முன்னுக்கு வத்துடலாம். அலுவலகங்களிலே மட்டும் இல்லே, எல்லா
இடங்கள்லேயும் இது ரொம்ப முக்கியம். வீட்டுக்குள்ளேயும் இது முக்கியம். வீட்டுக்கு வெளியேயும் இது முக்கியம்,
அடுத்தவர்கள் கிட்டே பழகறது எப்படிங்கறதை தெரிஞ்சிக்காதவன் வாழ்க்கையிலே முன்னேற முடியாது. இன்றைக்கு ஆயுதங்களாலே காயப்படுத்திக் கொள்கிறவர்களை விட
வார்த்தைகளாலே காயப்படுத்திக் கொள்கிறவர்கள் நாம் அதிகம்.
பெரியவர்கள் (தலாய்லாமா) என்ன சொல்றாங்க தெரியுமா, "நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டும் என்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை . ஆனால் யாரையும் புண்படுத்தி விடாதீர்கள்" அப்படின்னு சொல்றாங்க.
எனக்குத் தெரிந்த ஒருத்தர் ஓர் அலுவலகத்திலே வேலை பார்க்கறார். அவர் சொல்லுவார்.
"எனக்கு இந்த Interpersonal skills ரொம்ப அதிகம் சார்.
சக ஊழியர்கள் கிட்டே ரொம்ப சுமுகமா நடந்துக்குவேன்.
என்கூட வேலை பார்க்கிற ஒருத்தருக்கு ஏதாவது ஒரு கஷ்டம்ன்னா அந்த சமயத்துலே அவர் செய்ய வேண்டிய வேலையை நான் செஞ்சுடுவேன் சார்" அப்படிம்பார்.
நான் அவர்கிட்டே "சமீபத்துலே அப்படி ஏதாவது செஞ்சிருக்கீங்களா ன்னு கேட்டேன்.
'"செஞ்சிருக்கேன் சார் போன வாரம் புதன்கிழமை ஆபிஸ்லே என் பக்கத்து சீட்காரருக்கு வயித்துவலி, உடனே நான் மெடிக்கல் லீவு போட்டுட்டு எங்க வீட்டுக்கு போய்ட்டேன் சார்" அப்படின்னார்.

No comments:

Post a Comment