Saturday 12 August 2023

கருத்தில் கவனம்.

 கருத்தில் கவனம்.

குருவின் வார்த்தைகளை தலையில் சுமந்து கொண்டிருப்பவனால் ஞானமடைய முடியாது.
புத்தர் திடீரென்று ஓர் நாள் இறந்து போனார்.ஆனால் அவர் வார்த்தைகள் சேகரிக்கப்படாமல் இருந்தது.
எல்லாம் பொக்கிஷம்.ஆனால் யாரும் சேகரிக்கவில்லை.
மஹாகாஷ்யபரிடம் கேட்டார்கள்.அவர் சொன்னார் எனக்குத் தெரியாது.எதுவும் நினைவில்லை.அவர் சொல்லும்போதெல்லாம் அவர் எதை குறித்து சொல்கிறாரோ அங்குதான் இருந்தேன்.எதையும் நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவில்லை என்றார்.
அதனால்தான் மஹாகாஷ்யபர் ஞானமடைந்தார்.
மற்றும் அங்கிருந்த மற்ற ஞானமடைந்த சீடர்கள் யாருக்கும் நினைவில்லை.
ஆனால் ஆனந்தர் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருந்தார். ஒரு வரி கூட பிசகாமல் சொன்னார்.
அங்கு புத்தர் இறந்து பிறகு ஞானமடையாமல் இருந்தவர் அவர் மட்டுமே.
காரணம் மற்ற எல்லோரும் மீனை பிடித்துவிட்டு வலையைத் தூக்கி வீசிவிட்டனர். ஆனால் ஆனந்தரோ
மீனைப் பிடிக்காமல் வலையைச் சுமந்து கொண்டிருந்தார்.
பின்னால் பல வருடம் கடந்து அவர் ஞானமடைந்தார்.
எனவே குருவின் செய்திகள் ஒரு வாகனம். செய்தியைப் பெற்றுக்கொண்டு வாகனத்தை விட்டு விடுங்கள்.
*சொல்லப்படும் கருத்து தான் முக்கியம். சொல்லும் நபர் அல்ல. கருத்தின் மீது கவனம் வையுங்கள்.*

No comments:

Post a Comment