Monday 18 January 2021

தான் கூவித்தான் சூரியன் வந்தது

 தான் கூவித்தான் சூரியன் வந்தது

என்று சொல்கிறது சேவல்கள்.
நதியோடு போகும் ஒரு துரும்பு
நான்தான் இந்த கங்கையின் பிரவாகத்தையே வழிநடத்திக்கொண்டு போய் கடலில் பத்திரமாக சேர்க்கிறேன் என்று
நினைத்து அகம்பாவம்அடையுமாம்.
அது போல சில உலக மகாதலைகள் எல்லாம் இந்த பல நூறுகோடி ஜன சமுத்திரத்தையே
நான் தான் கட்டிக்
காக்கிறேன்.
நான் அசைந்தால்
அசையும் உலகம்.
நான் தான் தலைவன் என மார்தட்டும் போது சிரிப்புத்தான் வருகிறது
தினமும் கோழி காலையில் கூவி பழக்கப்படுத்திவிட்டது. காலப்போக்கில் தான் கூவியதும் விடிவதைப் பார்த்த கோழி போல்,
இந்த புரட்சியாளர்களும் தாம்தான் உலகத்தில்
சூரிய உதயத்துக்கு காரணம் என புளகாங்கிதம் அடைகிறார்கள்.
அகந்தை என்பது புத்தியை திசை போட்டுமூடிவிடுகிறது.
அகந்தையால் அழிந்தவர்கள் ஏராளம்.
இன்னும் சொல்லப்போனால், அகந்தையோடு என்னிடம் சிலர் பேசும் போதெல்லாம், அவர் முன் அவரை விட ஒரு படி மேல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வேகம் உருவாகும். அந்த வேகமே எனக்கு பல நேரங்களில் வெற்றியை அள்ளித் தந்தது. நாங்கள் எல்லாம் தெரிந்த பெரிய ஆளாக்கும் என்று அகந்தையில் பேசியவர்கள், இன்று களத்திலேயே இல்லை. வேறு களத்திற்கு ஓடி விட்டார்கள்.
பணிவு என்றும் வெற்றி தரும்
அகந்தை என்றும் வெற்றிடத்தையே தரும்.

No comments:

Post a Comment