Thursday 28 January 2021

பணிவு தரும் உயர்வு

 பணிவு தரும் உயர்வு

சிலர் நிறையத் திறமை, அறிவு இருந்தும்
வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாகப்
போராடியே அடைகிறார்கள். ஆனால்
அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம்
இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல
வேலை , அந்தஸ்து என உயர்ந்த
நிலைக்குப் போய் விடுகிறார்கள்.
அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில்
கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும்
உயர்ந்து கொண்டே செல்பவர்களை
உற்று நோக்கினால் அவர்களுகிடையே
ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம்
பிரதானமாக *பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.*
மற்றவர்களைப் புண்படுத்தாத, பிறரை
மதிக்கும் , பிறர் உணர்வை புரிந்து
கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை
லிப்டில் உயரே போவது போல் வாழ்வில்
உயரச்செய்யும். மற்றவர்கள்
படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற
வேண்டும். *ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.*
பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள
பிள்ளைகளுக்குத் தான் அதிகம் பாசம்
கிடைக்கிறது. அவர்கள் தேவைகள்
கேட்காமலேயே நிறைவேற்றப்படுகி
றது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது
ஆசிரியர்கள் அடிப்பதில்லை . சிறப்பாக
கவனித்துப் பாடம் சொல்லிக்கொடுகிற
பார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க்
வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பைத்
தருகிறது , எளிதில் வேலை கிடைக்க
உதவுகிறது. பணி உயர்வுக்கு
பிறரிடமிருந்து சிபாரிசு
பெற்றுத்தருகிறது. போட்டிகள்
பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள்
எதுவும் இருக்காது. இன்சூரன்ஸ்
ஏஜென்டுகள் போல எல்லாப்
பக்கமிருந்தும் நீங்கள் கேட்காமலே
உதவி தேடி வரும். மற்றவர்கள்
கருத்துக்கு எதிர் கருத்தைக் கூட
பணிவுடன் சொல்லும்போது அதற்கு
நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ
இருக்கும்.
இனிமையாக
் பேசுதலும் பிறர்
நலனில் அக்கறை காட்டுதலும்
எப்போதும் நமக்குப் பல மடங்காகத்
திருப்பிக் கிடைக்கும். திறமையான
பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின்
சக்தியைக் கொண்டே *காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.*
பிறர் பேச்சைக் காது கொடுத்து கேட்பதும்
பணிவு தான். தன்னடக்கம்
உடையவனது அதிகாரம் மந்திரக்கோல்
போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த
தலைவனாக முடியும். எல்லா மதங்களும் முதலில் பணிவை,
கீழ் படிதலை அல்லது அகந்தை
அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப்
பருவத்திலிருந்தே கடைபிடிக்க
வேண்டிய முதன்மைப் பண்பு இது
தான். இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டால் வாழ்வில் அனைத்திலும் வெற்றி தான்.

No comments:

Post a Comment