Friday 29 January 2021

நன்மையே தீமைக்குத் தீர்வு.

 நன்மையே தீமைக்குத் தீர்வு.

வழிகாட்டுகின்றார் வள்ளுவர்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
விளக்கம்.
தன்னையே தோண்டினாலும், தோண்டுபவர் விழுந்து விடாதபடி தாங்கும் நிலம் போல, தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர்வதற்குத் தோட்டம் என்று எல்லாம் தருகிறது...
அதைக் கடப்பாரை கொண்டு காயப்படுத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படிச் செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களைத் தாங்குகிறது...
நம்மைப் பற்றித் தவறாக, இழிவாகப் பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்குத் தீங்கு வராமல் தாங்க வேண்டும். தீங்கு செய்பவர்களைத் தாங்கும் நிலம் போல. நன்மையானது தீமையை விடப் பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும்.
தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை செய்யவியலாத அளவிற்கு பகை நிறைந்தது என்று சிலர் சொல்வார்கள்.
ஆனால்!, அன்பு பகையை,வெறுப்பை விட மேன்மையும் திறனும், வாய்ந்தது. இது ஒளியையும் இருளையும் போன்றது. இருள் ஒரு போதும் ஒளியை மேலோங்க, மேற்கொள்ள முடியாது. ஒளியில் மிளிரும் போது இருள் மறைந்து போகிறது...
பெரும்பாலானோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒளிக்கு பதிலாக இருளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...
ஒளியே இருளிற்கு தீர்வாகும். அன்பு மாத்திரமே வெறுப்புக்கு தீர்வாகும். நன்மையே தீமைக்குத் தீர்வாகும்...!
நாம் செய்ய வேண்டியது , தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.. அதனால் பகைமை விடுத்து மிகுந்த நேசத்தை ஏற்படுத்த முடியும்...
எவராவது தீமை செய்து விட்டால், மிகப் பொறுமையாக நடந்து கொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப் பல நன்மைகளுக்கு நாம் சொந்தக்காரன் ஆகலாம்...!
ஆம் நண்பர்களே...!
எவராக இருந்தாலும், எங்கே இருந்தாலும் அதிக தீமை செய்தால் நீங்கள் பதிலாக அதிக நன்மை செய்யுங்கள்...!
நன்மை செய்வது உங்களை வெற்றியாளர்கள் ஆக்கும்...!!
தீமை செய்பவர்கள் ஒருவரும் ஒருபோதும் வெற்றிவீரனாக ஆவதில்லை.

No comments:

Post a Comment