Wednesday 27 January 2021

நல்ல எண்ணம் வேண்டும்

 நல்ல எண்ணம் வேண்டும்

உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
*நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.*
நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
*அன்பான ஒரு வார்த்தை போதும்!*
ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*படித்தால் மட்டும் போதுமா?*
தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன் உடைய மனிதராக இருப்பார்.

No comments:

Post a Comment