Saturday 16 January 2021

சூழ்நிலையைத் தங்களுக்கு அணுசரனையாக மாற்றலாம்.

 சூழ்நிலையைத் தங்களுக்கு அணுசரனையாக மாற்றலாம்.

ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு சூழ்நிலைகளைச் சந்திக்கின்றோம். சில நேரங்களில் சூழ்நிலைகள், அது நல்லதோ, கெட்டதோ அமையாமல் போகும் நிலை ஏற்பட்டால், ஒரு சிலர் தங்களுக்கு ஏதுவாக அமைத்துக் கொள்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்...
ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா், இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால்!,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது. அதனால்!, யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்...!, அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள், அங்கிருந்த மக்களும் படுத்து விட்டார்கள்...
மனதை மாற்றும் முறை என்பது இது தான்...
அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரீகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்கப் போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்..
இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்...
கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுக்குள் ஒருவன் கூறினான், விரைவில் பணத்தை எண்ணி விடலாம் என்று,
மற்றொருவன் கூறினான், பொறு - அவசரம் வேண்டாம், பணம் நிறைய இருக்கிறது, நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் அறிவித்து விடும்...
இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்...!
கொள்ளை நடந்த போதே, வங்கியின் மேலாளா் இந்நிகழ்வை காவல்துறையிடம் கூற முனைந்த போது, அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார். வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய் விட்டது என்று சொல்லி விடுவோம் என்றார்...
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது இதுதான்"
இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி கூறினார்..,
வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்றார், இதுதான் தன்னலமான உலகம்...!
மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய் விட்டது என்று அறிவிக்கப்பட்டது, அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. அவர் பங்கு 50 கோடி...
கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர்...
எவ்வளவு எண்ணியும், அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை...
கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ,"நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால்!, இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர் என்று சொல்கிறார்கள்...
இப்போது தான். படிப்பின் அவசியம் புரிகிறது., இதற்குத் தான் நாமும் கொஞ்சம் படித்திருக்க வேண்டும் என்றான்...
ஆம் நண்பர்களே...!
எந்த சூழ்நிலைகளையும் கூட நாம் நினைத்தால் நமக்கு ஏதுவாக மாற்ற முடியும்...!
அப்படி மாற்றும் போது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...!!
ஆம்...!, எப்போதும் நல்லதையே நினைப்போம்.
நல்லதே நடக்கும். இது இயற்கையின் நியதி.

No comments:

Post a Comment