Monday 11 January 2021

அறிவுபூர்வமான உண்மை.

 அறிவுபூர்வமான உண்மை.

புத்தகத்தின் பெயர் :
எண்ணங்கள் ஆயிரம்
ஆசிரியர் :
கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம். : கண்ணதாசன்
"மனிதனை இயக்குவதே ஐம்புலன்கள் தான். இந்த ஐம்புலன்களையும், ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி வாழ்ந்தால்தான் அவனுடைய வாழ்வு உருப்படும்" இல்லையேல் மருப்படும்!"
‘தத்துவம்’ என்பது, ‘உண்மையை அறிதல்’ என்றும், ‘தன்னைஅறிதல்’
என்றும் பொருளாகும். நுண்ணிய பல உண்மைகளை எடுத்துச் சொல்வதுதான் தத்துவம்.
இதைத் தான் கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூம், பட்டினத்தாரும் "உன்னையே நீ அறிவாய்" என்று சொன்னதாக கவிஞர் கண்ணதாசன் இங்கு தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
கவிஞர், இதில் நம்பிக்கையைப் பற்றி மிகத் தெளிவான எழுதுகிறார். சொல்லித் திருத்த முடியாத வாதங்களை ஏற்றுக்கொண்டுவிட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதனை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும் போது, அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன.
சரித்திரத்தைக் நினைவு கூறும் கண்ணதாசன் இப்படி எழுதுகிறார். ஆணவக்காரன் ஒவ்வொருவரையும் விரோதித்துக் கொள்கிறேன். பிறகு அவனே, எல்லா எதிரிகளையும் ஒன்றுசேர்ந்து விடுகிறான். அவர்கள் தனக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் போது, "யாரோ செய்த சதி" என்று அலருகிறான். எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி எவனிடமிருக்கிறதோ, அவனுடைய தோல்விகூட மோசமான தோல்வியாக இருக்காது.
நமது பண்டைய மூதாதையர்கள் சொன்ன வாக்குகள், அனுபவ முறைகள், பழமொழிகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்தால், எங்கள் வாழ்வும், வளமான ஆரோக்கியமும் மங்காமல் செழிப்பாக வரும் ஒரு கட்டமாகும். "நீ ஏறுகிறாய் என்றால், இறைவன் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்" என்று அர்த்தம். "இறங்குகிறாய் என்றால், சிந்திக்க வைக்கிறான்" என்று அர்த்தம். உனது பெருமை கடவுளின் மகிமை, உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம். "சாகலாம்" என்று கடலிலே விழுந்தவன், கை நிறைய முத்துகளோடு திரும்புவதும் உண்டு. முத்து எடுக்கச் சென்றவன் செத்துப் போனதுமுண்டு.
பதவி, பூர்வபுண்ணியம் பற்றி கண்ணதாசன் எழுதியிருப்பது கேலியும் கிண்டலுமாக உள்ளது. ஆனால் ஆழமாகச் சிந்தித்தால் அதன் உண்மை புரியும் என நினைக்கிறேன்.
கொல்லன் ஒருவன் ஒரு இரும்பைப் காச்சி தண்ணீரில் போட்டான். "சுர்" என்று சத்தம் கேட்டதாம். தண்ணீரும் வற்றிப் போய்விட்டது. உடனை கொல்லனுக்கு ஒரு யோசனை. ஊர் சனங்கள் தன்னை விரோதித்ததால் ஒரு பெரிய இரும்பைக் காச்சி கிணற்றில் போட்டால், கிணறு வற்றிவிடும் ஊர் சனங்கள் சாகட்டும் என்று, அப்படியே செய்தான், கடைசியாக இரும்புகள் தான் தொலைந்தது மிச்சம். அப்பாவிப் பெற்றோர்களுக்கு அற்புதமான குழந்தைகள் கிடைக்கின்றன, அற்புதமான பெற்றோர்களுக்கு அயோக்கியமான குழந்தைகள் கிடைக்கின்றன. சில குழந்தைகள் தோழில் வைத்துக் கொண்டாடுகிறார்கள், வேறு சில குழந்தைகள் சோற்றுக்கு அலைய விடுகிறார்கள். பூர்வ புண்ணியக்கணக்கு அந்தளவுக்கு நிறைவேற்றப்படுகிறது, என்கிறார் கண்ணதாசன்.
முடியும் போதெல்லாம் விடியும் என்கிறார் எமது கவிஞர். வருவது போவதற்காக, போவது வருவதற்காக. பிறப்பது இறப்பதற்காக, அழிவது மிள்வதற்காக. விதைப்பது அறுப்பதற்காக, அறுப்பது விதைப்பதற்காக. "நான்" என்று நினைக்காதீர்கள், நினைத்தால் ஆண்டவன் "தான்" என்பதைக் காட்டிவிடுவான்.
அரசியல் வாதிகள் எப்படி உருவாகிறார்கள்? அவர்களை வளர்ப்பதும் கொண்டாடப்படுவதும் பாவப்பட்ட மக்களே. நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்கே ஜனநாயகம் உருவானது. எங்களை நீங்கள் நம்பிய பிறகு, நீங்கள் மற்றவர்களை நம்புவது மடமைத்தனம் என்று சொல்கிறார். மறதி, மடி, தூக்கம் இவை 3 றிலும் நான் Super Star என்று சொல்லும் கண்ணதாசன், அதற்காக தன் வாழ் நாளில் நடந்ததை விவரிக்கிறார். முடிவில், உன்னிடம் தேவைக்கு மிஞ்சிய வசதிகள் இருப்பின், இல்லாதவர்களுக்குக் கொடுத்துதவு. ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைப் பெறுவாய். கஷ்டப் படும் ஒருவருக்கு பலனை எதிர்பாராமல் நாம் உதவி செய்யும் போது, எங்களிடமிருந்து உதவி பெற்றவர்தான் திருப்பித்தர வேண்டும் என்றில்லை. அதன் பலனை நாம் வேறொருவர் மூலமாக பெற வாய்ப்புண்டு. இதனை யாருமே உணர்வதில்லை சிந்திப்பதுமில்லை. இந்த உண்மையை அறிவுபூர்வமாக விளக்குகிறார் கண்ணதாசன். "
நண்பர்களே! மிக சிறிய
அருமையான
புத்தகம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
நன்றிகள்
பொன் விஜி - சுவிஸ்

No comments:

Post a Comment