Monday 18 January 2021

இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பே....

 இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும்பே....

ஒரு பஞ்சப் பரதேசி, துறவி, சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி. குளிர்காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலிலே துண்டை விரித்து அவர் படுத்திருந்தார்.
உலகத்தையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தான். ஞானி அவனைக் கவனிக்கவில்லை. "நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்!" என்றான் அவன். “அப்படியா..." என்று சாதாரணமாகச் சொன்னார் ஞானி.
"ஏ, ஞானியே! உனக்கு என்ன வேண்டும், கேள்; நான் தருகிறேன்!" என்றான் அலெக்சாண்டர். "எனக்கு ஒரு உதவி வேண்டும்," என்றார் ஞானி "என்ன வேண்டும்? பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா, மாளிகை வேண்டுமா," என்று கேட்டான்.
"ஒன்றும் வேண்டாம். நீ கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். உன் நிழல் வெயிலை மறைக்கிறது" என்கிறார் ஞானி.
அலெக்சாண்டர் என்றால் உலகமே நடுங்கும், ஞானி நடுங்கவில்லை.
அலெக்சாண்டரின் ஆணவத்தை, ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.
காரணம், ஞானிக்குத் தேவை என்று எதுவுமில்லை.
(அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் இருந்து)
நன்றி முகேஷ் பாலச்சந்திரன்

No comments:

Post a Comment