Saturday 23 January 2021

தோள் தட்டிக் கொடுப்பவருடன் பழகுங்கள்.

 தோள் தட்டிக் கொடுப்பவருடன் பழகுங்கள்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கும்
ஜெயிப்பதற்கும் தான் இருக்கிறது. ஒரு நல்ல
விஷயத்தைச் செய்ய நினைத்தால் பல எதிர்மறை
எண்ணங்கள் எந்த ரூபத்திலும் வரலாம்.
அதைத் தாண்டினால் தான் வெற்றியாளராக
மிளிர முடியும்.
எதிர்மறை எண்ணங்கள் மற்றும்
விசயங்களைத் தாண்டி வாழ்க்கையில்
சாதிப்பது எப்படி
தன்னம்பிக்கை மனிதர்களுடன் இருங்கள்.
சிலர் எந்த விசயத்தை எடுத்தாலும் இது
நடக்காது, சரிவராது என எதிர்மறையாகவே
பேசுவார்கள். இவர்களுடன் நாம் பழகினால்
அதே எண்ணம் தான் நமக்கும் வரும்
உன்னால் முடியும், தன்னம்பிக்கையுடன்
போராடு என தோள் தட்டிக் கொடுக்கும்
மனிதர்களுடன் பழகுங்கள்.
வெளியில் செல்லுங்கள்
மனம் எந்த விஷயத்தையாவது நினைத்து
குழப்பமாக இருந்தால் வீட்டில் இருக்காமல்
வெளியில் நமக்கு பிடித்த இடத்துக்குச்
செல்லலாம் அல்லது இயற்கைச் சூழல் நிறைந்த
இடத்திற்குச் சென்று வாருங்கள்
இதன் மூலம் மனம் ரிலாக்சடையும், குழப்ப
விஷயத்துக்கான தீர்வையும் மனம் சொல்லும்
இசையை கேளுங்கள்
இசையை விட மனதை அமைதிப்படுத்தும் ஒரு விசயம்
இருக்கவே முடியாது. மன அழுத்தத்தில்
இருந்தாலோ அல்லது பிரச்சனையில்
இருந்தாலோ அழகான இசை கேட்பதின் மூலம் அதிலிருந்து மீள முடியும்.
உங்களிடமே பேசுங்கள்
என்னால் முடியும்! என்னால் முடியும்! இந்தத்
தாரக மந்திரத்தைக் கண்ணாடி முன் நின்று
கொண்டு மனம் தோல்வியால் துவண்டிருக்கும்
போது உங்களுக்கு நீங்களே சொல்லிப்
பாருங்கள்
அது உங்கள் மனதில் ஆழமான
தன்னம்பிக்கையையும், நேர்மறை
எண்ணங்களையும் விதைக்கும்.
அன்பானவர்களுடன் நேரம் செலவழித்தல்
ஒருவரின் உண்மையான அன்புக்கு மிஞ்சிய
ஆறுதல் இவ்வுலகில் உண்டா என்ன
எந்தவொரு விசயம் சம்மந்தமாகவும் எதிர்மறை
எண்ணம் தோன்றினால், நம் மனதுக்கு பிடித்த
மனிதர்களுடன் நேரம் செலவிட்டால்
எதிர்மறை எண்ணம் உடனே மறைந்து மனம்
குதூகலம் அடையும்.
ஒரே ஒரு மரத்தில் இருந்து 1 லட்சம் தீக்குச்சிகள் உருவாக்க முடியும்.
*ஒரே ஒரு தீக்குச்சியை வைத்து 1 லட்சம் மரங்களை அழிக்கவும் முடியும்.
அது போல ஒரு மனிதனிடம் இருக்கும் ஒரே ஒரு எதிர்மறை சிந்தனை அவனிடம் உள்ள எல்லா நல்ல விஷயங்களையும் அழித்து விடும்.

No comments:

Post a Comment