Friday 22 January 2021

நீர்க்குமிழியாம் வாழ்க்கை.

 நீர்க்குமிழியாம் வாழ்க்கை.

சராசரி மனிதனின் வாழ்க்கை 65 ஆண்டுகள். கண்மூடிக் கண் திறப்பதற்குள் முடிகின்ற மிக் குறுகிய கால வாழ்க்கை.
செயற்கரிய செயல்களைத் திட்டமிட்டுச் செய். உலகம் உன் காலடியில். கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை வாழ்வங்கு வாழ முற்படுவோம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் "காலமும் மற்றும் மனமும் இயற்கையின் மிகப் பெரிய பொக்கிஷ்ம், அதை மிக மிகக் கவனமாக ஒருவன் கையாள வேண்டும். ஆகையால், என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிக மிக சிறந்தவைகளுக்காக செலவு செய்வேன்" என்றார்.
இந்த தெளிவான கூற்றைவிட காலத்தின் அருமையை ஒருவர் உணர வைக்க முடியாது.
காலத்தின் அருமையை முதலில் உணருங்கள். பிறகு உங்களது நேரத்திற்கு நீங்களே மதிப்பு கொடுங்கள் !!
பிறகு உங்கள் மனதின் அருமையை மற்றும் உள்ளத்தின் அருமையை உணர முயலுங்கள். உங்கள் திறமையை உணரலாம்.
மிகப் பெரிய வெற்றி வேண்டுமா?
வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டுமா?
மிகப் பெரிய வெற்றி என்பது, 24 நிமிட நேரத்தில்
தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமிட்டு,
சிந்தனை வழி, சரியான துல்லியமாக
திட்டத்தைச் செயல்படுத்தி உலக அளவில்
சாதனை படைப்பதில் தான் உள்ளது.
1

No comments:

Post a Comment