Tuesday 9 May 2023

மேடு பள்ளம்

 மேடு பள்ளம்

• உங்களைப் புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி
அமைதியாக இருங்கள்.
உலகத்திற்காக வாழ வேண்டாம்.
• எதுவும் நிரந்தரமில்லை.
எல்லாம் மாறக்கூடியது. மனிதர்கள், அன்பு, பாசம் அனைத்தும்.
• வாழ்க்கையில் மேடு பள்ளம் இருக்கும். நாம் தான் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
• ஈசலின் ஆயுட்காலம் ஒரு நாள் தான். இறப்பைப் பற்றி கவலைப் பட்டால் வாழ்க்கை நரகமாயிடும். முடிந்தவரை மற்றவரிடம் அன்பு காட்டுங்கள்.
• பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனா நாம எப்படி நல்ல பேரோட வாழ்ந்தோங்கிறது தான் முக்கியம். என்னுடைய அப்பா அடிக்கடி கூறுவது.
• நம்மை பிடித்தவர்களைக் கூட வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்காதவர்களை போகவிடுங்கள்.
• எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ இயலாது. முடிந்தவரை மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
• எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
• பேசுவதைக் குறைத்துக் கொண்டு மற்றவர் செயலைக் கவனிக்க வேண்டும்.
• அழகிய முகம்
இனிமையான பேச்சை நம்ப வேண்டாம்.

No comments:

Post a Comment