Tuesday 9 May 2023

சின்மயா மிஷன் நூல் வெளியீட்டு விழா

 சின்மயா மிஷன்

நூல் வெளியீட்டு விழா.
இன்று இரவு மதுரை சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தர் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருதேவர் ஸ்ரீமத் பகவத்கீதை தமிழாக்கம் நூல் மற்றும் சுவாமி சிவயோகானந்தா எழுதிய யஷப்ரச்னம் (கேள்வி பதில்)
இரு நூல்கள் வெளியீட்டு விழா சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் அதன் தலைவர் டி. திலகர் தலைமையில் நடைபெற்றது, டாக்டர் பொன்மீரா விவேக் போஸ் மொழிப் பெயர்ப்புப் பணிகள் குறித்து உரை நிகழ்த்தினார், தியாகராஜர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் மு. அருணகிரி யஷப்ரச்னம் நூல் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
இரு நூல்களை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி
ஜிஆர். சுவாமிநாதன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜே. குமார்
ஸ்ரீ மத் பகவத்கீதை நூலினைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் யஷப்ரச்னம் நூலினைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் திபெத் பகுதியில் உள்ள கயிலை மலையைச் சுற்றி உள்ள பகுதிகளே யட்சர்களின் உறைவிடங்கள் என புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன.
இந்திய மக்களின் உணர்வோடு கலந்தது மகாபாரதமும் ராமாயணமும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
இந்த நூல் 124 கேள்விகள் 287 பக்கங்களில் நல்ல தமிழில் உருவாகி உள்ளது. சுவாமி சிவயோகானந்தா அளவற்ற ஈடுபாட்டுடன் இதனை எழுதியுள்ளார்.
115 ஆவது கேள்வி :இனிய சொற்களைப் பேசும் நபர் அடையும் லாபம் என்ன?
சொற்களுக்கு 3 பரிமாணம் உண்டு, அன்பு, நன்மை, வாய்மை
உண்மையாயினும் இதமாகக்கூறு, உண்மையைப் புண்படும்படி கூறாதே, பொய்யை இதமாகக் கூறாதே.
38 ஆவது கேள்வி : அனைத்து உயிரினங்களின் விருந்தினர் யார்?
அக்னி தூய்மைப்படுத்துவதில் மிகச் சிறந்தது அக்னி, படைப்பு தொடங்கிய காலம் முதல் எல்லா மங்களகரமான வேள்விகளிலும் அக்னியின் பங்குண்டு.
மழை போன்ற வாழ்க்கை வசப்பட இது போன்ற நூல்கள் வழிகாட்டும் என்றார்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக மாநகர் மதுரையில் கீதையை எளிய நடையில் தமிழில் எடுத்துச் சொல்லியும், வளரும் தலைமுறைக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்கினார்.
ஆர்த்தி ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
துணைத் தலைவர் ஆர். கோபால்சாமி, செயலாளர் எம் பி எஸ். திருமலையப்பன் மற்றும் சிக் நிர்வாகிகள், மிஷன் முன்னோடிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை கல்வியாளர் குககுமாரி தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஏராளமான அறிஞர்கள் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பயனுற்றனர்.
அரங்கம் முழுவதும் பங்கேற்றவர்கள் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தனர்.











































No comments:

Post a Comment