Saturday 20 May 2023

அனுபவம் அழகானது.

 அனுபவம் அழகானது.

*சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடங்கள்
புத்தகத்திலும் கூட இருப்பதில்லை.*
*நீங்கள் எப்போது எல்லாம் அதிகமாக
அவமானம் மற்றும் ஏமாற்றம்
அடைகிறீர்களோ அந்த நிமிடங்கள் தான், உங்களை உருவாக்குக்கிறது என்று அர்த்தம். அந்த அடிகள் அடுத்த
முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்.*
*அனுபவங்களைச் சேகரித்து வையுங்கள்.
இனி வரும் நாட்களில்
எச்சரிக்கையோடு செயல்பட அதுவே உதவும்.*
*ஓரு நிமிடம் உங்கள் கவலைக்கு இடம் கொடுத்தால் நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மகிழ்ச்சியை இழப்பீர்கள். உங்கள் வாழ்வில் எதை இழந்தாலும் துணிச்சலோடு போராடுங்கள் வெற்றி உங்கள் அருகில்.*
*தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும்.*
*இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.*
*எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ் நாளெல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள்.

No comments:

Post a Comment