Monday 22 May 2023

உலகம்பட்டி லேனா. சுப்பிரமணியன் மகள் திருமணத் திருவிழா.

 உலகம்பட்டி லேனா. சுப்பிரமணியன் மகள் திருமணத் திருவிழா.

இன்று காலை உலகம்பட்டியில் நடைபெற்ற அருமை நண்பர், சேலம் பெருநகரில் லேனா போட்டோ லேப் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செய்து வரும் கூட்டுக் குடும்ப முன்னோடி
லேனா. சுப்பிரமணியன் - ராமுசிட்டு தம்பதியரின் மகள்
விசாலாட்சி - கார்த்திக் (வெற்றியூர் ஆறு. சே. ராஜ்குமார் மகன்)
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார், எஸ். சரவணன், நாச்சம்மை சரவணன் உள்ளனர்.
மற்றும்
எழுத்தாளர் லேனா. தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன், பெருங் கொடையாளர் அபிராமி ஜூவல்லர்ஸ் பழனியப்பன், திருப்பதி செட்டியார், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் நிர்வாகிகள் கிர்லோ வீரப்பன், பிஎல் எம். முத்தையா, சோ. கதிரேசன், செந்தில்நாதன், ராமநாதன், அருணாசலம்
மற்றும் நெற்குப்பை சித. தியாகராஜன், சோமனூர் நகரத்தார் சங்கத்தின் தலைவர் வ. ராமன், தேன்மொழி ராஜமாணிக்கம், ஹாப்பி டூர்ஸ் விஸ்வநாதன், எம் சி என். மாணிக்கம், ஏற்காடு சிங்காரம், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர் வி. சீனிவாசன், எம் ஆர் கலர் லேப் உரிமையாளர் லெட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
செட்டிநாட்டுப் பெருமக்கள் ஒரு திருவிழாவில் பங்கேற்ற உணர்வோடு கலந்து கொண்டனர்.
பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
சமைய‌ல் சக்கரவர்த்தி செவ்வூர் பாண்டி குழுவினர் சிறப்பு உணவு.
கடந்த நான்கு நாட்களாக மருத்துவ முகாம், தொலைக்காட்சி புகழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, திருவாசக முற்றோதல், ஊர் விருந்து, திரைக் கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி, நலத் திட்ட உதவிகள், புகழ் பெற்ற மெஹந்தி & சங்கீத் நிகழ்ச்சி, திரைப்பட கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி என ஊர்மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இது ஒரு பண்பாட்டுப் பெருவிழாக நடைபெற்றது.
தன் மகள் மணவிழாவை மக்கள் திருவிழாவாக நடத்திக் காட்டிய மேன்மையாளர் லேனா. சுப்பிரமணியன்.
விழா ஏற்பாடுகளை சகோதரர்கள் லேனா. காசிநாதன், லேனா. குமார், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் பேராற்றல் மிக்க தலைவர் லேனா. நாராயணன், லேனா. அரசு, லேனா. நடராஜன் தம்பதியர் மற்றும் மு. அ. கலையரசன் தம்பதியர், லேனா. அண்ணாமலை ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மணமக்கள் பல்லாண்டு வாழியவே















No comments:

Post a Comment