Monday 22 May 2023

அமைதியும் பக்குவமும் .

 அமைதியும் பக்குவமும் .

குறைகளைச் சுட்டிக்காட்டாத தன்னடக்கம்.
தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை.
‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள்.
குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.
பொருளால் வரும் ஆசையின் குறைவு.
மற்றவர் செயல்களுக்கு தனக்குப் புரியாத காரணங்கள் இருக்கலாம் என்ற பரந்த எண்ணம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் தான் செய்த சில பல செயல்கள் சரியல்ல என்ற புதிய ஒப்புதல் பார்வை.
ஆச்சர்யங்கள் குறைந்து போய் விட்ட ஒரு அமைதி.
‘இதெல்லா சகஜமப்பா’ என்று நினைத்து ஒரு புன்முறுவல் பூக்கும் மனப்பக்குவம்.
Like க்காக பொய் புளுகாமல், தோன்றியதைப் பகிரும் வெளிப்படைத் தன்மை.
இதெல்லாம் உங்களுக்கு வந்து விட்டால் நீங்களும் வாழ்க்கையில் பக்குவமடைந்து விட்டீர்கள் என்று பொருள்.

No comments:

Post a Comment