Wednesday 24 May 2023

இயல்பாக இருங்கள்.

 இயல்பாக இருங்கள்.

*காலம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச் சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும்.*
*தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்துப் புலம்புவதை விட்டு விட்டுச் சற்று திரும்பிப் பாருங்கள்.*
*இங்கு ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தைச் சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றன.*
*எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.*
*தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.*
*மனிதனைத் தவிர பிற உயிர்கள் ஒரு போதும்
தன் குணங்களையும்
இயல்புகளையும்
ஒருபோதும் மாற்றிக் கொள்வதே இல்லை ..*
*வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி பெறச் சுறுசுறுப்பும் , ஊக்கமும் தேவை ...*
*அதே பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் , தன்னடக்கமும் தேவை .*

No comments:

Post a Comment