Saturday 6 May 2023

ராமர் குணம்

 ராமர் குணம்*

*கேளுங்கள்!* *மோட்ச* *கதி* *நிச்சயம்!*
ராமனின் உயர்ந்த குணங்கள்
பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான்.
எண்ணற்ற குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பு எனப் போற்றுகிறது ராமாயணம்.
வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், வனத்துக்குச் சென்றான்.
தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டான்.
சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம்!
அதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி எனப் போற்றுகிறது ராமாயணம்.
அதுமட்டுமா? அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியைத் தந்தருளினான்.
இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை சிவபெருமானே உபதேசிக்கிறார் என்பதாக ஐதீகம்!
ராமரை நினைத்தால் போதும்... ராமரை மனதார வணங்கினால் போதும்... நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சந்ததிக்கும் நம் உலகுக்குமே மோட்சம் தந்தருள்வார் ராமபிரான்!
*ஸ்ரீராமரின் உயர்ந்த* *குணம்*
********************
ஸ்ரீராமரின் உயர்ந்த குணமும் மண்டோதரிக்கு கிடைத்த நாராயண தரிசனமும்.
ராவண வதம் முடிந்த பிறகு, போர்க்களத்தில் ஸ்ரீராமர் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.
அந்த நிழலுக்குச் சொந்தக் காரியான பெண், அவரது திருப்பாதங்களை தொட முயற்சிப்ப தை அவளது நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.
“நீ யாரம்மா?” என்றார்.
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிட ம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.."
"மேலும் க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். இங்கே என் நிழல் உன் மீது படுவதைக் கூட நீ விரும்பவி ல்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்.."
"என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல.உலகைக் காக்கும் பரம்பொருள். மஹாவிஷ்ணு ஆவார். தன்னு டைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்க ளையே தாங்கி நிற்கிறான்.."
"பாதாள லோகமே அவனது பாதங்கள் பிரம்ம லோகமே அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது. திசைகளனை த்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாம ம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது.."
" அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை.."
" உங்களுடைய வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னி டம் இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீங்கள் வென்றீர்கள்,” என்றாள்.
உடனே ஸ்ரீராமன் தன் சுயவடிவான நாராயண னாக விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்த வள் மண்டோதரி. அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண் டோதரி ஒழுங்காக உடையணிந்தி ருந்ததைக் கண்டு, இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான்.
அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கிய தால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு ஜெய் ஸ்ரீமந் நாராயண தரிசனம் கிடைத்தது.
ஜெய் ராம். ஜெய ராம்...ஜெய ஜெய சீதாராம்.

No comments:

Post a Comment