Wednesday 10 May 2023

அளவாகப் பேசுங்கள்.

 அளவாகப் பேசுங்கள்.

*வாழ்க்கை என்பது யாருக்கோ வாழ்ந்து காட்டுவதற்கு இல்லை.*
*நாம் நலமாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே.*
*வாழ்க்கையில் மற்றவர்களை மதித்து நீ நீயாகவே வாழும் வரையில் மகிழ்ச்சி நம்முடன் இருக்கும்.*
*அறிவாளிகளை விட முட்டாள்கூட சில நேரம் வாழ்க்கையில் உயர்ந்து விடுகிறார்கள்.*
*ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதுமில்லை.*
*பிடித்தவர்களிடம் பேசுங்கள் அளவாக.*
*அதிகமாகப் பேசினால் தொல்லை என்று நினைக்கக்கூடும்.*
*வாழும் இந்த வாழ்க்கையில் யாரையும் பகைக்கவோ, வெறுக்கவோ, வேண்டாம்.
அன்பு காட்டுங்கள் அனைவரும் மகிழ்வர்.*
*இவ்வுலகில் வாழ்க்கை என்பது நிலையானதன்று.*
*இன்பமும், துன்பமும், இணைந்து நம்மை நல்வழி படுத்தவே.*
*அனைவருமே யாரோ ஒருவரின் அன்புக்கு ஏங்குபவரே, எனவே அன்பைக் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வோம்.*

No comments:

Post a Comment