Friday 26 May 2023

புதிய சிந்தனைகள்.

 புதிய சிந்தனைகள்.

*உங்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற முதலில்
உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள்.*
*உங்கள் மீது உங்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.*
*சில நேரங்களில் நீங்கள் கீழே விழுந்தது போலத் தோன்றலாம். உங்களுடன் யாரும் இல்லாதது போல உணரலாம்.*
*கவலைப்படாதீர்கள், உங்களை விட சிறப்பான துணை உங்களுக்கு வேறு யாருமில்லை.*
*இறைவன் எப்பொழுதும் நமக்குள் தான் இருக்கிறார்.
நாம்தான் அதை உணர்வதில்லை.*
*நீங்கள் எப்பொழுதும்
தனியாக இல்லை.*
*உங்களை வழிநடத்தும்
சக்தி மிகவும் பெரியது.*
*தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருங்கள் *
*இறைவன் தனது அருளை எல்லோருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.*
*உங்கள் வாழ்வும் இறையருளால் நிரம்பி இருக்கிறது.*
*நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.*
*உங்களால் முடியாத போது இறைவன் வழிகாட்டுவார்.*
*உங்கள் நம்பிக்கையாலும் புதிய சிந்தனைகளாலும் உங்கள் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்ற முடியும்.*
*எந்த எல்லைக்கும் போகலாம்
என்ற நிலை இருந்தும்
தன்னையும் ஓர் எல்லைக்குள்
நிலை நிறுத்தி வாழ்பவனே
நல்ல மனிதன்.*

No comments:

Post a Comment