Tuesday 16 March 2021

அறிவுகளில் சிறந்த அறிவு, அனுபவமே சிறந்த அறிவு

 அறிவுகளில் சிறந்த அறிவு,

அனுபவமே சிறந்த அறிவு
அனுபவமே உலகின் மிகச்சிறந்த ஆசான்.
1)தேவையானவற்றை செய்வதும், மற்றும்
தேவையற்றவற்றை செய்யாமல் இருப்பதும், தேவையானவற்றை தெரிந்தும் செய்யாமல் இருப்பதும், தேவையற்றவற்றை தெரிந்தே செய்து கொண்டிருப்பதும் அனுபவம் மேலும் அனுபவமின்மைக்கான மிகப்பெரும் வித்தியாசமாகும்
2)அனுபவம் என்பது உணர்தல் ஆகும். விளைவுகளை ஆராய்ந்தறிந்து காரியங்களைச் செய்வது அனுபவத்தின் விதையாகும்.எது சரி எது தவறு என்பதை நிதான அனுபவத்தின் மூலமாக உணர்ந்து அதை செயல்படுத்துவதே அனுபவத்தின் ஞானம் நிறைந்த பழம் ஆகும்.
3)அனுபவங்களைப் பலவிதமாகப் பிரிக்கலாம். முன்பின் தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்து அதன்மூலம் கற்றுக்கொண்ட அனுபவசாலி. தங்களின் முயற்சியின் மூலம் அனுபவத்தை கற்றுக்கொண்ட அனுபவசாலி. அனுபவம் கண்டவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன் மூலம் முன்னேறிய அனுபவசாலிகள்.மேலும் சத்தியத்தின் அருமையைப் புரிந்து அதன்படி நேர்மையாக நடக்கும் அனுபவசாலிகள்.பிறர் வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு அதை தனது வாழ்க்கையில் கடைபிடித்து நடக்கும் அனுபவசாலிகள்.
4)பெரியவர்கள் சொல்லிக் கேட்டு அதன்படி நடந்த அனுபவசாலிகள் தங்கள் வாழ்வின் உதாரணத்தை பெரியவர்களைக் குறிக் கோளாக காண்பித்து சொல்கின்றார்கள். பெரியவர்கள் சொன்னதைக் கேட்காமல் தன் மனவழிப்படி நடந்து வாழ்க்கையில் அடிபட்டு அனுபவசாலியானவர்கள் பெரியவர்கள்
ஆனதும் தனது வாழ்வில் நடந்தவற்றைப் பிறருக்கு அறிவுரையாக சொல்கின்றார்கள். முதல் அனுபவசாலி அதிர்ஷ்டசாலி.அடுத்து
இரண்டாமவர் கடின முயற்சியாளி.
5)அனுபவம் என்பது அவரவர் வாழ்க்கையில் அவரவர்கள் செய்த முயற்சியின் பலன். சிலர் அதில் தோல்வி அடைந்திருக்கலாம். அதில் அவர்கள் எப்படித் தோல்வி அடையாமல் இருப்பது என்பதை பிறருக்கு கற்றுக் கொடுக்கலாம். சிலர் அதில் வெற்றி அடைந்திருக்கலாம். எப்படி வெற்றியடைவது என அவர் பிறருக்குக் கற்றுக் கொடுக்கலாம். ஆக இரண்டுமே கேட்பவருக்கு வெற்றிதான். இதைத்தான் அனுபவப் பாடம் என சொல்வது.
6)அனுபவம் என்றால் உணர்தல் என்று பொருள்.விளைவுகளை அறிதல் என்று பொருள்.எத்தனை கற்றிருந்தாலும் அனுபவம்
என்பதே முதல் பாடமாகும். இறைவனுக்கு கூட ஞானத்தை சொல்வதற்கு அனுபவசாலியின் ஒரு உடலே தேவைப்படு கின்றது.அனுபவம் என்பது உயர்ந்த மலையின் மேல் நின்று யாவற்றையும் தெளிவாகப் பார்ப்பது போன்றதாகும். அந்த மலையின் உயரத்திற்கு ஏறுவதற்கு அவர் பட்ட சிரமமே அனுபவமாகும்.
7)அனுபவசாலிகளினுடைய பேச்சை அலட்சியப் படுத்துபவர்களே வாழ்வில் துன்பம் அடைகின்றார்கள். இது நமது நன்மைக்குத் தான் என்று அதைப் புரிந்து, அதைக்கேட்டு , அதன் வழிப்படி நடப்பவர்களை அனுபவம் இன்பத்திற்கு அழைத்துச் செல்கின்றது. அனுபவம் என்பது பட்டை தீட்டப்பட்ட வைரம் ஆகும். உளியால் செதுக்கப்பட்ட சிலையாகும். உணர்வால் எழுதிய உண்மை காவியமே அனுபவம்.
8)உலகில் உருவாகிய பொருள்கள் யாவும் அனுபவத்தால் உருவானவையே ஆகும். அனுபவம் ஆற்றலைக் கொடுக்கின்றது. ஆற்றலானது புதிய ஒரு அனுபவத்தை உருவாக்கு கின்றது. ஆற்றலும் அனுபவமும் இணைந்ததுதான் ஆத்மா, பரமாத்மாவின் சந்திப்பாகும்.
9)அனுபவம் என்பது லட்சியத்தை அடைவதற்கான வழியாகும். லட்சியத்தை அடைவதில் லட்சணத்தை கொண்டு வருவதற்கு அனுபவம் என்ற பாடமே உலகில் மிகச்சிறந்த கல்வியாகும். அனுபவம் புதிய சிந்தனைகளை உருவாக்கு கின்றது. புதிய சிந்தனைகள் புத்துலகை உருவாக்கு கின்றது. அனுபவம் கண்ணில்லாதவரை கண் தெரிந்த ஒருவர் அழைத்துச்செல்வது போன்றதாகும். அனுபவம் ஒற்றுமையின் மாலையாகும். அதில் உள்ள மலர்களில் மகிழ்ச்சி என்ற நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும்.
10)அனுபவம் என்றாலே முதிர்ந்தது என்று பொருள்படும். அனுபவம் என்பது கனியாகும். அனுபவம் என்பது பொறுமையினால் பூத்த மலர் ஆகும் .அனுபவத்திற்குள் நிதானம் சகிப்புத்தன்மை அஹிம்சை ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது. அனுபவத்திற்கு அவசரமில்லை அவசரப்பட்டால் அது அனுபவமில்லை.
11)அனுபவம் என்பது அறிவுள்ளவர் களின் முதல் கலையாகும்.அனுபவம் நிறைந்தவர்கள் அமைதியாக இருப்பார். எதையும் சாட்சியாக பார்ப்பார். அனுபவத்தின் மொழி மௌனம். அனுபவம் நிறைந்தவர்களின் செயல்கள் பிறருக்குப் போதனைகளை அள்ளித் தருகின்றன.அனுபவம் தைரியத்தை தருகின்றது.தைரியம் அனுபவத்தை உருவாக்குகின்றது. அனுபவம் நிறைந்தவர் சொல்வதை கேட்பவன் வருவதை எதிர் கொள்கிறான். அதைக் கேட்காதவன் வந்த பின் அனுபவிக் கின்றான்.
12)அனுபவமே உலகின் மிகச் சிறந்த ஆசான். அனுபவம் கற்றுக் கொடுத்ததை
ஆசிரியரால் கூட கற்றுக் கொடுக்க முடியாது.ஆசிரியர் கற்றுக்கொடுக்கின்றார். குரு அனுபவத்தை கொடுக்கின்றார். அனுபவம் என்பது நற்சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட கோவில். எனவே அனுபவம் என்பது ஒரு வரம். நல்ல அனுபவங்களே உலகில் மிகச்சிறந்த வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு வரம் நிறைந்த வாழ்க்கை இயற்கையின் அருளால் நம் அனைவருக்கும் அமையட்டும்.

No comments:

Post a Comment