Monday 8 March 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
06.03.2021. சனிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🟢 *இன்றய நாளில் அன்று..*
🎶1967ல்
திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழ்நாட்டில்
முதன் முறையாக ஆட்சியைக்
கைப்பற்றியது.
🎶இன்று தமிழகத் திரைப்பட இயக்குநர் 1972 – கரு பழனியப்பன் பிறந்த நாள்-1972.
🎶மதுரை மாவட்டம் உதயமாகிய தினம்-1790.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மாகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று.
இது தற்போது மதுரையை சுற்றியுள்ள
திண்டுக்கல், தேனி, விருதுநகர்,
ராமநாதபுரம்
மற்றும்
சிவகங்கை
ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
〰️〰️〰🎥🎥🎥〰️〰️〰️
*கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்*
🎼 நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும்
நிற்கும்
ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்
படம் ; ஆதிபராசக்தி
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment