Monday 29 March 2021

இவை எனது கணிப்புக்கள் மட்டுமே - தீர்மானமான முடிவுகள் அல்ல!

 இவை எனது கணிப்புக்கள் மட்டுமே - தீர்மானமான முடிவுகள் அல்ல!

திமுக தோற்க வேண்டும் என்றே கூட கனிமொழி ஒருவேளை திட்டமிட்டுக் காய் நகர்த்தக் கூடும்.
இப்போது திமுக ஆட்சியைப் பிடிப்பதால் கனிமொழிக்கு ஏதும் லாபமில்லை.
தோற்றால்?
பல அனுகூலங்கள் உள்ளன.
1) கட்சியை சரியாக வழி நடத்தவில்லை என்று ஸ்டாலின் மீது அதிருப்தியைக் கிளப்பலாம்.
2) பிரசாரத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததற்காக ஸ்டாலினைக் குற்றம் சாட்டித் தோல்விக்குப் பொறுப்பேற்று விலகச் சொல்லலாம்.
3) கட்சி தோற்றால் அடுத்த வாரிசு - உதயநிதி - அமைச்சராவதைத் தடுக்கலாம்.
4) அழகிரியும் கட்சியில் இல்லை - இப்போதைக்கு ஸ்டாலினும் முதல்வர் இல்லை - 5 வருடம் கழித்து 2026 க்குள் எந்த நிலை வேண்டுமானாலும் மாறும்.
5) தனக்கு இன்னும் வயதும் காலமும் நிரம்ப இருக்கிறது. எதற்கு அவசரப்பட்டு ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும்?
6) இந்தத் தேர்தலில் திமுக தோற்றால் ஸ்டாலின் தலைமை காலி - அழகிரியும் கட்சிக்கு வெளியே உள்ள நிலையில் தலைமை தானாகத் தன்னைத் தேடி வரும்.
7) தப்பித் தவறி திமுக ஜெயித்துவிட்டால் தான் பிரசாரம் செய்து "உழைத்த உழைப்பையும்" - கணக்கில் சேர்த்து விடலாம்!
இப்படி 5 வருடம்/ 10 வருடம் கழித்து கட்சித் தலைமை அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதில் தான் கட்சியில் என்ன பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற ஆழமான திட்டம் கொண்டவர் கனிமொழி.
ஆ.ராசாவின் பேச்சுக்கு இன்று "கண்டனமும்" தெரிவித்துவிட்டார் கனிமொழி!
அவ்வளவு நேர்மை மிக்கவராம்!
எப்படியும் செய்ய வேண்டிய டேமேஜ் செய்து, கொங்கு மண்டலத்தில் திமுகவை பஞ்சர் ஆக்கியாயிற்று!
எழுத்தாளர் ஞாநி தனது "ஓ பக்கங்கள்"- தொடரில் கூறியது போல - "கருணாநிதியின் வாரிசுகளிலேயே மிகவும் ஆழமானவர், ஆபத்தானவர் கனிமொழி!"

No comments:

Post a Comment