Tuesday 16 March 2021

கவியரசு புலனம்

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
15.03.2021. திங்கட்கிழமை
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🟢 *இன்றய நாளில் அன்று..*
🎶இன்று காவல் துறையினரின் வன் செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்.
🎶இன்று உலக முசுலிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல் நாள்.
🎶இன்று நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா பிறந்த தினம்.
🎶இன்று நுகர்வோர் தினம்.
உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள்
சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படு
கின்றது.
〰️〰️〰️⚖️💶⚖️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று.*
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
மயிலைப் பார்த்து கரடியென்பான்
மானைப் பார்த்து வேங்கையென்பான்
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்.. சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை
படம்: அருணோதயம்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*ஒருவர் மனதை ஒருவர் அறிய*
வணக்கம் ஐயா, இது நாள் வரை யில் தங்களுக்கு பதில் அனுப்பாமல் இருந்தேன்.
தங்கள் அனுப்பும் இன்றைய நாளில் அன்று நிகழ்ச்சியும் கவிஞரின் பாடல்கள் மனதிற்கும் , செவிக்கும் மிக இனிமையாகவும், அமிர்தமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.
-தேவகி,
கும்பகோணம்.
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment