Monday 29 March 2021

சோம்பேறிகளுக்குத் தான்

 சோம்பேறிகளுக்குத் தான்

அனைத்துச் செயலும்
கடினமாகத் தோன்றும்.
முயற்சி உள்ளவர்களுக்கு
அனைத்தும் இலகுவாக
தான் கண்ணுக்குத் தெரியும்.
அடுத்தவர்களின் வளர்ச்சியை
பார்த்து பொறாமைப்படும்
மனம் கொண்டவர்கள்
அவர்களின் வளர்ச்சியை
பார்க்கும் போது
அவர்களது முயற்சியையும்
சேர்த்துப் பாருங்கள்
உங்களுக்கு பொறாமை வராது.
வெற்றி எனும்
இலக்கை அடைவதற்கு
யாரும் நமக்கான
பாதையை
உருவாக்க மாட்டார்கள்
நாம் தான் அதற்கான
பாதையை செதுக்க வேண்டும்.
உழைப்பையும் ஊக்கத்தையும்
மட்டும் வைத்து வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது.
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும் ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான்
வெற்றிக்கு வித்திடும்.
நிலத்தில் தவறி விழுந்த
விதையே முளைத்து
மரமாகும் போது
தடுமாறி விழுந்த
நம் வாழ்வு மட்டும்
சிறப்பாக மாறாமல்
போய் விடுமா.
விழும் போது
தன்னம்பிக்கையுடன்
எழ வேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும்
முடிவுகளை நாம் தான்
எடுக்கப் பழக்க வேண்டும்.
பலரிடம் ஆலோசனை
கேட்கலாம்
ஆனால் இறுதி முடிவு
நம்முடையதாகத் தான்
இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் நமக்கு வளரும்.
நீங்கள் தனியாக
போராட பலம் இருந்தால்
மட்டும் போதாது
அதற்கான மன உறுதியும்
உங்களிடம் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் தான்
வெற்றி பெற முடியும்.
கடைசி நேரத்தில் கூட
எதாவது அதிசயம் நடக்கலாம்.
அதனால் ஒரு போதும் தன்னம்பிக்கையை மட்டும்
விட்டு விடாமல்
முழு மன உறுதியுடன்
முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

No comments:

Post a Comment