Saturday 20 March 2021

வெற்றி பெறுவது எப்படி

 வெற்றி பெறுவது எப்படி

உலகத்தில் அறிவில் ஆகச் சிறந்தவராக காணப்பட்டவர்களில் சாக்ரிடீஸூம் ஒருவர்..
அவர் அன்று ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் சாக்ரிடீஸிடம் வந்து,
"ஐயா தங்களிடம் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக்கொள்ளலாம் என வந்துள்ளேன்" என்றாராம் .
உடனே, சாக்ரிடீஸ் அவர்கள் "அப்படியா! சரி. அருகில் உள்ள ஆற்றின் உள் இறங்கி நில்" என்று சொல்லி விட்டு..
சாக்ரிடீஸ் உள் இறங்கி, அவர் தலையை பிடித்து அழுத்திவிட்டார்.
அவர் சில நொடிகளுக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல், தனது முழு முயற்சியில் மேல் எழும்பினார்.
பின், கோவமாக சாக்ரிடிஸிடம் வந்து..
"ஐயா, தங்களிடம் நான் வெற்றி பெறுவது எப்படி என்று தானே கற்றுக்கொள்ள வந்தேன், ஏன் இப்படி என்னை கொல்லப் பார்க்கின்றீர்கள்?' என்று கேட்டான்.
அதற்க்கு சாக்ரிடிஸ் சொன்னார்,
"நான் உன்னை தண்ணீரில் வைத்து அழுத்தும் போது, நீ எப்படி மூச்சு விடுவதயே முக்கியமாக கருதி மேல் எழும்பி வந்தாயோ..
அப்படி நீ எந்தச் செயல் செய்தாலும், அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என எண்ணி முழு முயற்சியுடன் செயல்பட்டால் உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றாராம்.

No comments:

Post a Comment