Wednesday 9 December 2020

வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்

 *வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..!*

*முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!*
*குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!*
*மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!*
*அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்!*
*சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!*
*அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!*
*பலிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதே!*
*மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!*
*கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....!*
*நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு.. நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு..!!*
*நேரங்கள் நேர்மையானவை..!அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை..!!*
*ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்..!!*
*வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்பவர்கள் தைரியம் இருந்தால் வாழ்ந்து பாருங்கள்..!!* படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment