Thursday 10 December 2020

365 நாளும் வாழ வழி.

 365 நாளும் வாழ வழி.

வருடத்தில் *365 நாளும் வாழ வழி என்ற தனது புத்தகத்தில் பிரபல அறிஞர் *ஜான் ஏ. ஷிண்ட்லர்* நிம்மதியாக வாழ சில வழிகளைச் சொல்கின்றார்.
சீரான வாழ்க்கை அமைந்திருந்தால் அதைத் தொடர்ந்து அனுபவியுங்கள். கரடுமுரடான வாழ்க்கை நிலை ஏற்பட்டால் நான்கு வழிகளை மனதில் கொள்ளுங்கள் என்று கூறும் அவர் நான்கு வழிகளை முறைப்படுத்தி கூறுகிறார்.
1. முதலில் எவ்வளவு மோசமான நிலையாக இருந்தாலும் வெளிப்படையாக அமைதியுடன் இருங்கள். முடிந்தால் நகைச்சுவையுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் (இடுக்கண் வருங்கால் நகுக)
2. சினிமா பிலிம் போல உங்களுக்கு நேர்ந்த அவல நிலையை திருப்பித் திருப்பி மனத்திரையில் ஓட்டிப் பார்க்காதீர்கள். தன்னிரக்கப்படவே கூடாது.
3. தோல்வியை எப்படி வெற்றியாக மாற்ற முடியும் என்று பாருங்கள். சமநிலை, தைரியம், மகிழ்ச்சி போன்ற பண்புகளால் உங்கள் தோல்வியை சமாளித்த நீங்கள் வெற்றி பெறும் நிலையை பார்த்து அனைவரும் வியப்படைவர்.
4. கீழ்க்கண்ட கொடிகளை உங்கள் மனம் என்னும் கோட்டையில் பறக்க விடுங்கள்.
சமநிலை:* (அமைதியுடன் இருப்பேன்)
வருவது வரட்டும்:* (இந்த தற்காலிக சரிவை ஏற்றுக் கொள்வேன்)
தைரியம்:* (இது மட்டுமல்ல; இனிவரும் தோல்விக்கும் தயார்)
மலர்ச்சி:* (இந்த தோல்வியை வெற்றியாக மாற்றியே தீருவேன்)
மகிழ்ச்சி:* (இன்னும் நல்ல முறையில் எல்லா மனிதரையும் அணுகுவேன்)
Kanaga Mahal Karthik, Ambikapathi Vasan and 6 others
3 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment