Saturday 12 December 2020

ஒரு கூட்டத்தில் பேசும் போது கண்ணனை புகழ்ந்தார் கண்ணதாசன்.

 ஒரு கூட்டத்தில் பேசும் போது கண்ணனை புகழ்ந்தார் கண்ணதாசன்.

கண்ணன் என் மன்னன். அவனது கானம் கேட்டால் பட்டமரம் துளிர்க்கும் என்றார் அவர்.
கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் உடனே எழுந்து....
நீங்கள் சொல்லுவது நிஜமானால் கண்ணனின் கையிலிருக்கும் புல்லாங்குழல் துளிர்த்திருக்க வேண்டுமே...அதுவும் பட்டமரம் தானே..? என்று கேட்டார்.
கண்ணதாசனை ஒருவர் மடக்கி விட்டதை கண்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்...
கண்ணதாசன் சற்றும் அசரவில்லை..
நிதானமாக சொன்னார்...
கண்ணன் கானத்தை கேட்டால் பட்டமரம் துளிர்க்கும்தான்...ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கைகளில் பட்டுக் கொண்டே இருக்கிறது.
பெருமாளின் கண்பட்டாலே மீண்டும் பிறவி கிடையாது. இங்கே புல்லாங்குழலில் அவன் கை பட்டுக்கொண்டே இருக்கிறது அதனால் மீண்டும் பிறவி கிடையாது.
நேராக மோட்சம் தான். அதனால் தான் புல்லாங்குழல் துளிர்க்கவில்லை.
அப்புறம் கரகோஷத்திற்கும் ஆரவாரத்திற்கும் கேட்க வேண்டுமா என்ன....?

No comments:

Post a Comment