Monday 28 December 2020

அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்..

 அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்..

வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிக்க ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தகுதித்தேர்வான சாட் தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவர் 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஏ.பி.எல். குளோபல் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் ஆரவ் அஹுஜா என்ற மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் உலகின் முன்னணி கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள இவர், அமெரிக்காவின் மாஸசூட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யேல் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.
ஐந்தாண்டுகள் வரை செல்லக்கூடிய இந்த சாட் நுழைவுத் தேர்வை எழுதிய 50 லட்சம் பேரில் 500 பேர் மட்டுமே 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.அதில் நம் தமிழகத்தை சேர்ந்த மாணவரும் ஒருவர்.
உலக அளவில் நடக்கும் தேர்வுகளிலும் நமது மாணவர்கள் முதலிடம் பிடிக்கும் தகுதியுடையவர்களே..
ஆனால்..?
நமது அரசியல்வாதிகள் இவர்களை முன்னேற விடுவதில்லை என்பதே வேதனையான உண்மை.
வாழ்த்துக்கள் ஆரவ் அஹுஜா .


No comments:

Post a Comment