Friday 18 December 2020

மார்கழி மாதம் பற்றிய கவியரசரின் கவிதை

 மார்கழி மாதம் பற்றிய கவியரசரின் கவிதை..

(இணையத்தில் கிடைத்தது)....
மாதங்களில் இது தனிமாதம் இந்த
மார்கழி மாதம் பிரமாதம்
நாகத்தின் நாதன் கண்ணனைத் தொழுது
நங்கையர் பாடும் ஒரு மாதம்
துலங்கும் வைணவர் காலையில் எழுந்து
குளிர்ந்த நீரில் குளிப்பார் – தூயன்
கண்ணன் பேர் சொல்லி பாடி
ஆயிரம் பாடல்கள் படிப்பார் – விடி
வெள்ளி முளைக்கு முன்பே
வேதத்தின் தலைவனை பூஜிப்பார்
வெள்ளெனும் காலையில் கோயிலில் சென்று
துள்ளிய சடங்குகள் முடிப்பார்
மார்கழி தன்னில் தோன்றிடும் நன்னாள்
வைகுந்தம் காட்டும் ஏகாதசி
மண்ணிலும் விண்ணிலும் மகிமை விளங்கும்
ஊர்வலம் வருவான் சந்யாசி
நீராடும் குலமாதரை அழைக்கும்
ஆண்டாள் பாடிய திருப்பாவை
நிகரில்லா தொரு திருவெம்பாவை
தமிழர்களுக் கொரு கைப்பாவை
ஆயிரம் குளங்களும் நீர்நிறைந்திருக்கும்
அறுவடை மாதம் மார்கழி
ஆனந்தக் கோலத்தில் கன்னியரெல்லாம்
ஆடிடும் மாதம் மார்கழியே
தாயினும் பெரியவன் கண்ணன் சொன்னது
மாதங்களில் நான் மார்கழியே
தாங்காக் குளிரில் அவனை அழைத்து
தழுவும் மாதமும் மார்கழியே!
நன்றி விவேக் ஆனந்த்


No comments:

Post a Comment